விசிகவில் 3 சிட்டிங் எம்எல்ஏவுக்கு சீட் மறுப்பு.. நேரடியாக களமிறங்கும் திருமாவளவன்.. பாவம் ஷாநவாஸ்!
சென்னை: விசிகவில் சிட்டிங் எம்எல்ஏ-க்களான எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் மற்றும் பனையூர் பாபு ஆகிய மூவருக்கும் சட்டசபைத் தேர்தலில் சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிட்டிங் எம்எல்ஏ சிந்தனைச் செல்வனுக்கு செய்யூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் விசிகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விசிகவுக்கு காட்டுமன்னார்கோவில், செய்யூர், திண்டிவனம், அரக்கோணம், திருப்போரூர், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி மற்றும் பெரியகுளம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

6 தனித் தொகுதிகளும், 2 பொதுத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் விசிக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசியலில் விசிகவின் பிடியை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து செய்யூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ-வும் கட்சியின் துணை பொதுச்செயலாளருமான சிந்தனைச் செல்வனுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திண்டிவனம் தொகுதியில் வன்னி அரசு, அரக்கோணம் தொகுதியில் வழக்கறிஞர் எழில் கரோலின், திருப்போரூர் தொகுதியில் பன்னீர்தாஸ், பெரியகுளம் தொகுதியில் சக்திவேலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதியில் மாலதி மற்றும் பண்ருட்டி தொகுதியில் அப்துல் ரகுமான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிட்டிங் எம்எல்ஏக்களான எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் மற்றும் பனையூர் பாபு ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஆளூர் ஷாநவாஸ் நாகை தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தார்.
இம்முறை நாகை தொகுதியில் மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற பனையூர் பாபுவுக்கும், திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எஸ்.எஸ்.பாலாஜிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. விசிகவின் 8 வேட்பாளர்களில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு இஸ்லாமிய வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
விசிகவுக்கான 8 தொகுதிகள் முடிவாகிவிட்டது.. ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்.. திருமாவளவன் பேட்டி! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications