தனிச் சின்னத்தில் விசிக? காத்திருக்கும் ஆபத்து? அதிமுக அழைப்பு; திருமா பதிலடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிகவுக்கு 3 சீட்டுகளைத் தர திமுக தயங்குவது ஏன் என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் சில வாரங்கள்தான் உள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை முடித்து தொகுதிகளைப் பெற்றுவிட்டன. வேறு சில கட்சிகள் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை அளவுக்கு முன்னேறிவிட்டன.

ஆனால், விசிக இன்னும் முதல் சுற்றுக்கு மேல் அடுத்தகட்ட நகர்வே நடைபெறவில்லை. 3 தொகுதிகள் என்பதில் உறுதியாக உள்ளது. அந்த நிலைப்பாட்டில் சமரசம் இல்லை என்கிறார் திருமாவளவன்.

ஊடகங்கள் அவர் அதிமுக பக்கம் செல்லலாம் என்று ஆருடம் கூறிவருகின்றன. அதற்கு 'ஊகங்களில் செய்தி வெளியிடுகிறார்கள். அதை ஊடக சுதந்திரமாக நினைத்து நாங்கள் கடந்து போகிறோம்.

ஆனால், செய்திகளில் கொஞ்சம் உண்மைத்தன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என்று மென்மையாகக் கண்டித்துக் கொண்டுள்ளார் திருமா.

VCK Is it good to stand on a separate symbol Or is it dangerous

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது. அது விசிகவுக்கும் சேர்த்து விடப்பட்ட அழைப்புதான் என்று தகவல் பரவி வருகிறது.

திமுக காட்டும் கண்டிப்புக்குப் பின்னால் சில காரணங்கள் உள்ளன. பானை சின்னத்தில்தான் விசிக நிற்பேன் என்கிறது. அப்படி நின்றால், திமுக பலம் முன்பைவிட குறையும். மேலும் விசிகவின் வெற்றியை உறுதியாக நம்ப முடியாது.

கடந்த முறை பல கட்ட காத்திருப்புக்குப் பின்னர் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் திருமாவளவன் வெற்றி பெற்றார். விசிகவின் பானை சின்னம் 5,00,229 வாக்குகளைப் பெற்றது.

VCK Is it good to stand on a separate symbol Or is it dangerous

அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகளைப் பெற்றார். நோட்டாவே 15,535 வாக்குகளைப் பெற்றது. நாம் தமிழர் கட்சி 37,471 வாக்குகளைப் பெற்றது. அதைவிட அமமுக வேட்பாளர் 62,308 வாக்குகளைப் பெற்றார்.

இந்த புள்ளிவிவரங்களைக் கொண்டு பார்த்தால் திருமாவளவன் வெற்றியே நூலிழையில்தான் நடந்துள்ளது. இப்போது அது போல் நடக்கக் கூடாது. அதற்காகவே திமுக உதயசூரியன் என்ற பொதுச் சின்னத்தில் நிற்க விசிகவுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதை திருமாவளவன் ஏற்க மறுத்து வருகிறார். தனிச் சின்னம் என்பதில் உறுதி காட்டுகிறார். ஆனால், ஆதவ் அர்ஜுனாவுக்கு விசிகவில் சீட்டு கிடைத்தாலும், அவர் உதயசூரியன் சின்னத்தில் நிற்கவே விருப்பம் தெரிவித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

VCK Is it good to stand on a separate symbol Or is it dangerous

இதனிடையே அதிமுக மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

"இந்தத் தாமதம் வழக்கமான ஒன்றுதான். ஒரே கட்ட பேச்சுவார்த்தையோடு அனைத்தையும் முடிவு செய்ய வேண்டும் என்பது இல்லை. ஆரம்பத்தில் 4 தொகுதிகளைக் கேட்டு கோரிக்கை வைத்தோம்.

அடுத்து இப்போது 3 தொகுதி என்பதி உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்று பொதுத் தொகுதி என்பது எங்கள் கோரிக்கையாக உள்ளது. அதில் மாற்றம் இல்லை.

2009இல் நாங்கள் 2 தொகுதிகளில் போட்டியிட்டோம். 2014இல் அதே திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிட்டோம். 2019இல் கூட திமுக கூட்டணியில் 2 தொகுதியில்தான் போட்டியிட்டோம்.

VCK Is it good to stand on a separate symbol Or is it dangerous

இந்தத் தேர்தலில் 3 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். இதை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் தெளிவாக எடுத்து வைத்தோம்.

இதில் கிடைக்காவிட்டால் என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக கூட்டணியுடன் தான் விசிக இந்தத் தேர்தலைச் சந்திக்கும். அதில் மாற்றம் இல்லை" என்றவர் அதிமுக அணியிலிருந்து விசிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியாகும் தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

"அதிமுக அவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் காட்டும் ஆர்வத்தைவிட, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்றால், அதிமுக என்ன நோக்கத்திற்காக பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

VCK Is it good to stand on a separate symbol Or is it dangerous

பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தது. பாமக இருந்தது. தேமுதிக இருந்தது. தமாகா இருந்தது. ஒரு கட்டத்தில் அதிமுக அந்தக் கூட்டணியைவிட்டு வெளியே வந்தது. அப்படி வெளியேறிய பிறகு, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக்கட்சி களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு கூட்டணியை அமைக்க அது அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.

அதற்கு மாறாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இன்னும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்ற ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு, அந்தக் கட்சிக்குச் சைகை காட்டுவதன் பொருள் என்ன?

VCK Is it good to stand on a separate symbol Or is it dangerous

திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்த வேண்டும். அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளை வெளியேற்றிவிட வேண்டும். இதுதான் அதிமுகவுக்கு யாரோ கொடுத்துள்ள ரகசியத் திட்டம் எனத் தெரிகிறது.

காங்கிரசுக்கு அதிமுக மறைமுக அழைப்பு விடுத்துள்ளதை விசிகவுக்கு கொடுத்த அழைப்பாக நாங்கள் பார்க்கவில்லை. அது யாரோ அதிமுகவுக்குக் கொடுத்த அஜண்டா போல் உள்ளது" என்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+