"ரோட்ல எதுக்கு நிக்கறீங்க.. இன்னா பன்றீங்க.." போதையில் போலீஸாருடன் தகராறு செய்த விசிக வழக்கறிஞர்!
சென்னை: மதுபோதையில் போலீஸாருடன் தகராறு செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரது காரை பறிமுதல் செய்தனர்.
Recommended Video
ஏற்கெனவே பெண் வழக்கறிஞர் ஒருவர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து பேசிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மற்றொரு வழக்கறிஞர் ஒருவர் இது போல் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை, கொண்டி தோப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கார் ஒன்று அசுர வேகத்தில் சென்று அரசுப் பேருந்து மீது மோதுவது போல் சென்று நின்றுள்ளது. இதனை கண்ட போலீசார் உடனடியாக காரில் இருந்தவரிடம் விசாரிக்க சென்றுள்ளனர்.

மாஸ்க்
அப்போது காரில் முகக் கவசம் அணியாமல் ஒருவர் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தான் ஒரு வழக்கறிஞர் என்றும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் என தெரியவந்துள்ளது.

விசாரணை
இது பற்றி சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த எஸ்.ஐ. ராமச்சந்திரன் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர் மீது வழக்குப் பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்துள்ளார். தற்போது வழக்கறிஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மதுபோதை
அந்த வீடியோவில் மதுபோதையில் காரை ஓட்டி கொண்டு முகக் கவசம் அணியாமல் இருந்த வழக்கறிஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது , எதுக்கு நீங்கள் ரோட்ல நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு போலீஸார், நாங்கள் டூட்டி பார்க்கிறோம் என்றார். அதற்கு அந்த ஆசாமி என்னா டூட்டி பாக்கிறீங்க என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

லாக்டவுன்
போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில் அந்த நபர் அவர்களிடம் தகராறு செய்த காட்சிகள் வைரலாகின. இதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லாக்டவுனின் போது காரை ஓட்டிச் சென்ற பெண் வழக்கறிஞர் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டு அதற்கு அவர் விளக்கம் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications