"என் மடியில் கனமில்லை.. அதனால் வழியில் பயமில்லை".. ED ரெய்டுக்குப் பிறகு ஆதவ் அர்ஜுனா பரபர விளக்கம்!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்ற நிலையில், அதுகுறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மேலும், கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது.

மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா: ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டில் இரண்டு முறை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆதவ் அர்ஜுனா, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதவ் அர்ஜுனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆப் காமன் தலைவராக இருந்தார். அண்மையில் திருச்சியில் நடைபெற்ற வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அடுத்த சில நாட்களில் அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
விசிகவில் முக்கிய பதவி: ஆதவ் அர்ஜுனாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட வைக்க திருமாவளவன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால்தான் திமுக கூட்டணியில் பொது தொகுதி ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின.
ஆனால், திமுக கூட்டணியில் விசிகவுக்கு பொதுத் தொகுதி ஒதுக்கப்படவில்லை. கடந்த முறை போலவே 2 தனித் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக விசிக கட்சிகளுக்கு இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்ட்டின் மருமகன், விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுன் வீட்டில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத் துறை சோதனை
ஆதவ் அர்ஜுனா விளக்கம்: இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆதவ் அர்ஜுனா. அதில், “எனது அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனை நிறைவடைந்தது. நேற்று தொடங்கி இன்று காலை வரை ஒரு நாள் முழுக்க சோதனை நடத்தப்பட்டது. பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.
அதன் அடிப்படையில் சோதனையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது. எத்தனை தடைகள் வந்தாலும் எனது பணிகள் தொடரும்.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தர வேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதி எனது பயணம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
-
"பயத்தை காட்டிட்டியே பரமா"! வேட்புமனு நிறுத்தி வைப்பால் பதறிய ஆதவ் அர்ஜுனா! கடைசியில் ஏற்பு! -
7+1 ராஜ்ய சபா சீட் தரேன்னு ஸ்டாலின் சொன்னாரு.. நான் என்ன சொன்னேன் தெரியுமா? திருமாவளவன் விளக்கம் -
விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்.. தவெகவினரை பங்கப்படுத்திய திருமாவளவன் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்?












Click it and Unblock the Notifications