ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜிக்கு விசிகவில் புதிய பொறுப்பு.. திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: விசிக மாநில பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜி, முதன்மைச் செயலாளராக ஆளூர் ஷாநவாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலில் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில், இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்து திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் விசிகவின் சிட்டிங் எம்எல்ஏ-க்களான ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோருக்கு மீண்டும் சீட் கொடுக்கவில்லை.

இதனால் விசிகவில் பல்வேறு நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நேரடியாக பேசி சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு கேட்டதாக விசிகவினரால் குற்றம்சாட்டப்பட்டது. இதனை திருமாவளவனும் ஒரு நேர்காணலில் கூறி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோர் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின் திருமாவளவனை வந்து நேரில் சந்திக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னரே விசிக அலுவலகத்தில் திருமாவளவனை சந்தித்தனர். இதன்பின்னரே ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத சூழலில், விசிகவில் இவர்கள் இருவருக்கும் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விசிகவின் துணை பொதுச்செயலாளராக இருக்கும் ஆளூர் ஷாநவாஸ்க்கு அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விசிகவின் பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications