பாமக வலதுசாரி கட்சியாக மாறிவிட்டது.. பஞ்சாயத்துக்கு சென்றது யாருனு பாருங்க.. திருமாவளவன் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இடதுசாரி அரசியலால் எழுச்சி பெற்ற பாமக, தற்போது வலதுசாரி அரசியலுக்கு முழுமையாக மாறிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். பாமகவில் உட்கட்சி நடந்து வருவதாக கூறிய அவர், தற்போது பஞ்சாயத்து செய்யக் கூடியவர்கள் அம்பலமாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பாமகவின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. பாமகவை கையில் எடுக்க அன்புமணி தயாராகிவிட்ட நிலையில், வன்னியர் சங்க ஆதரவு ராமதாஸ் பக்கமே இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்தித்தார்.

VCK Leader Thirumavalavan Criticizes PMK s Shift to Right-Wing Politics

பாமக - பாஜக கூட்டணி?

இந்த சந்திப்புக்கு பின் உடனடியாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்தார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை தொடங்கி வைத்திருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக விரைவில் இணையும் என்று பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை பாஜக மூலமாக அன்புமணி செய்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

திருமாவளவன் பேட்டி

இதற்கான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையில் நடப்பது உட்கட்சி விவகாரம், அவர்களின் குடும்ப விவகாரம். அதில் எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஆனால் இன்று நடுவராக சென்றிருப்பவர் குருமூர்த்தி.

பாமகவின் எழுச்சிக்கு காரணம்

பாமக தொடக்க காலத்தில் இடதுசாரி சிந்தனையாளர்களின் ஆதரவை பெற்று வளர்ந்தது. ஆனால் இன்று வலதுசாரி அரசியலுக்கு முழுமையாக போய்விட்டார்கள் என்பதை உணர்த்தக் கூடிய வகையில் பஞ்சாயத்தார்களின் முயற்சி வெளிப்படுத்துகிறது. பாமக இடதுசாரி அரசியலால்தான் எழுச்சி பெற்றது என்பதை ஜனநாயக சக்திகள் அறிவார்கள்.

வலதுசாரி கட்சியான பாமக

ஆனால் வலதுசாரி கட்சியாக மாறிவிட்டது. இப்போது பஞ்சாயத்து செய்யக் கூடியவர்கள் வெளிப்படையாக அம்பலமாகி இருக்கிறார்கள். அது தமிழ் மக்களுக்கு வெளிச்சமாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். திமுக - விசிக கூட்டணி நீண்ட ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று திருமாவளவன் வெளிப்படையாகவே அறிவித்தார்.

அதிமுக கூட்டணியில் பாமக?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைய விரும்புவதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அதேபோல் அன்புமணி கூட்டணி தொடர்பாக எடுக்கும் முடிவுகளில் ராமதாஸ்-க்கு விருப்பமில்லை என்று வெளிப்படையாக தெரிந்தது. தற்போது மீண்டும் பாமக தரப்பில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+