காலை பிடித்து.. கலங்கிபோன திருமாவளவன்.. ஆம்புலன்சில் பொறுப்பாளருக்கு சிகிச்சை.. நெகிழும் சிறுத்தைகள்
திருமாவளவனின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகிறது
சென்னை: மதுராந்தகம் விசிக பொறுப்பாளர் உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளார்..
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுராந்தகம் ஒன்றிய பொறுப்பாளர் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
அவரை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.. அப்போது எடுக்கப்பட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

ஆம்புலன்ஸ்
பாதிக்கப்பட்ட நபரை ஆம்புலன்ஸ் வேனில் படுக்க வைத்துள்ளனர்.. அவருக்கு சுயநினைவு இல்லை.. மூக்கில் ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ளது.. ஆம்புலன்ஸ் உள்ளேயே உட்கார்ந்து, சிகிச்சை பெறும் நபரின் காலை நேசத்துடன் அழுத்தி பிடித்து, கலங்கி காணப்படுகிறார் திருமாவளவன்.. அதேபோல, இன்னொரு போட்டோவும் ஆம்புலன்சிலேயே எடுக்கப்பட்டுள்ளது.. அங்குள்ள அவரது குடும்பத்தினருக்கு கையை பிடித்து ஆறுதல் சொல்கிறார் திருமாவளவன்.

திருமாவளவன்
பொதுவாக, கட்சிக்காரர்கள் உடல்நலம் குன்றியிருந்தால் அவர்களை சிகிச்சை பெறும் மருத்துவமனையிலோ அல்லது வீடுகளிலோ சென்று சந்திப்பதுதான் தலைவர்களின் வழக்கம்.. ஆனால் சிகிச்சை நடக்கும் அந்த ஆம்புலன்ஸ் வண்டியிலேயே ஏறி உட்கார்ந்து, நோயாளியை பார்ப்பதும், நலம் விசாரிப்பதும், குடும்பத்தினருக்கு நம்பிக்கை தருவதும் இதுதான் முதல்முறை. இதுதான் அக்கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மனிதம்
இதுதான் திருமா, இதுதான் மனிதம் என்ற வாசகங்கள் அடங்கிய ட்வீட்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு நன்றி செலுத்தி வருகின்றனர்... இந்த படங்களையும் விசிகவினர் ஷேர் செய்து வருகின்றனர். கட்சியின் ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு தூண்கள் என்பதை உணர்ந்து திருமாவளவன் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு கொண்டு வருவதாக கமெண்ட்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன.

பெருமை
குறிப்பாக, எந்த தலைவரும் எழுச்சி தலைவர் போல இருக்க மாட்டார்கள், விடுதலை சிறுத்தைகள் தாய் எழுச்சி தமிழர் என்பதற்கு இந்த படம் சாட்சி.. சில தலைவர்கள் தொண்டரை மரத்தை வெட்டிப்போடு, குடிசையை கொளுத்து, கல்லெடுத்து அடி, கட்டையை எடுத்து அடி என்று தவறான வழியில் வழிநடத்தும் தலைவர்கள் மத்தியில், தொண்டருக்கு ஒன்று என்றால், துடிதுடித்து போகும் எங்கள் தலைவர் எவ்வளவோ மேன்மையானவர்.. உங்களை தலைமை ஏற்று நடப்பதற்கு நாங்கள் பெருமை அடைகிறோம் அண்ணா என்று பதிவிட்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications