விசிக மாநாட்டுக்கு வராத ஆளூர் ஷா நவாஸ்.. நடவடிக்கை எடுக்க தயாராகும் திருமாவளவன்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரான ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்காதது விசிக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழுவில் ஆளூர் ஷாநவாஸ் பெயர் இருந்தும் அவர் பங்கேற்காதது ஏன் என்று கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் திருமாவளவன் தயாராகி வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால் அதிகளவில் கூட்டம் கூடியது. அதேபோல் விசிக தலைவர் திருமாவளவனுடன் புகைப்படம் எடுக்க இளைஞர்கள் பலரும் ஆர்வம் காட்டினர். இதனால் திருமாவளவன் நிதானம் இழந்து கொந்தளிக்க தொடங்கிவிட்டார்.

Thirumavalavan

சுமார் ஒன்றரை மணி நேரம் பேச திட்டமிட்டிருந்த திருமாவளவன், 5 நிமிடங்களில் பேசிவிட்டு அரங்கில் இருந்து வெளியேறினார். மேடையில் இருந்து கீழே வர முடியாமல் திருமாவளவன் பின் வழியாக இறங்கிய போதும் கூட்டம் கட்டுக்குள் அடங்கவில்லை. ஒரு கட்டத்தில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் விசிக மாநாடு திட்டமிட்டபடி நடத்தப்படாமல், கைவிடப்பட்டது.

இதனிடையே இந்த மாநாட்டில் விசிகவின் முதன்மைச் செயலாளரான ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்கவில்லை. விசிக மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழுவில் ஆளூர் ஷாநவாஸின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனாலும் மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்கவில்லை. இதனால் ஆளூர் ஷாநவாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவனை சிறுத்தைகள் நெருக்க தொடங்கி உள்ளனர்.

சட்டசபைத் தேர்தலின் போதே ஆளூர் ஷாநவாஸ் சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இதன்பின் அவரை சமாதானம் செய்ய முதன்மைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதன்பின் தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு தெரிவித்த நிலையில், ஆளூர் ஷாநவாஸ் முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசை கடுமையாக சாடி வந்தார். இது விசிகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அப்போதே ஷாநவாஸிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று விசிக சீனியர்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்தன. மறுபக்கம் விசிகவின் சங்கத்தமிழன் நேரடியாகவே ஆளூர் ஷாநவாஸை கடுமையாக சாட தொடங்கினார். இதற்கு மத்தியில் திமுக ஏற்பாடு செய்த கலைஞர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்று உரையாற்றினார்.

ஆனால் விசிகவின் மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்கவில்லை. இதனால் அவரிடம் விளக்கம் கேட்க கோரி திருமாவளவனை விசிகவினர் மீண்டும் நெருக்க தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆளூர் ஷாநவாஸ் வகித்து வரும் முதன்மைச் செயலாளர் பதவியையும் கைப்பற்ற பலரும் களமிறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+