ஜெயலலிதாவின் தம்பியாக.. அதிமுக தோழமைக் கட்சி.. அறியாமல் இருக்கிறார் எடப்பாடி.. திருமாவளவன் அட்வைஸ்!
சென்னை: ஜெயலலிதாவின் தம்பியாக அரசியல் களத்தில் பணியாற்றியவன் நான் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கமாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் அதிமுக, தனது செல்வாக்கை பாஜகவிடம் இழந்துவிடக் கூடாது என்பதை தோழமையுடன் சுட்டு காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி தொடக்கம் முதலே இணக்கமாக இல்லை. இரு கட்சியின் தொண்டர்களும் சேர்ந்து பணியாற்றாத நிலையில், பொருந்தா கூட்டணி என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக - பாஜக கூட்டணி இணக்கமாக இல்லை என்று சொல்ல திருமாவளவன் யார்?

திருமாவளவன் பேட்டி
திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனுக்கு கூட்டணி ஆட்சி என்பது கொள்கை. ஆனால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் என்று விமர்சித்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ஜெயலலிதாவுக்கு தம்பியாக அரசியல் களத்தில் பணியாற்றியவன் என்பது அதிமுக தலைவர்களுக்கு தெரியும்.
ஜெயலலிதாவின் வாழ்த்து
எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து நான் வெளியேறிய போது, தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக தோழமை கட்சி என்று கருதுவதால் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம். அதிமுக - பாஜக இடையில் இணக்கமான உறவு ஏற்பட வேண்டும் என்று எங்கேயும் கூறவில்லை.
தோழமைக் கட்சி
அதிமுக - பாஜக இடையில் ஒருங்கிணைப்பு இல்லை என்று அதிமுகவின் அன்வர் ராஜா கூறி இருந்தார். அவரின் கருத்துக்கு நான் பதில் அளித்தேன். அதிமுக - பாஜக இணக்கமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை கிடையாது. ஏனென்றால் திராவிட இயக்கமாக நாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற அதிமுக, பாஜகவால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணம் தான்,. அதில் வேறு ஒன்றும் இல்லை.
எடப்பாடி பழனிசாமிக்கு அட்வைஸ்
தமிழ்நாட்டில் அதிமுக வலுவாக இருந்தால், பாஜகவால் காலூன்ற முடியாது என்ற நப்பாசை தான். பாஜகவால் அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்துள்ளார். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை பணத்தில் கல்லூரிகள் கட்டுவது நல்ல பணிதான் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக - விசிக கூட்டணி
2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து விசிக தேர்தலில் போட்டியிட்டது. 9 தொகுதிகளில் போட்டியில் 2 தொகுதிகளில் விசிக வென்றது. ஆனால் 2007ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறினார். அப்போது ஜெயலலிதா, தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications