ஆகா.. விஜய் பேசுறத பார்த்தீங்களா.. பூரிக்கும் விடுதலை சிறுத்தைகள்! அம்பேத்கர், பெரியார், காமராஜரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வி விருது வழங்கும் விழாவில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜரை படியுங்கள் என்று மாணவர்களுக்கு நடிகர் விஜய் வழங்கிய அறிவுரைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னெடுப்பதை விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை போட்டியிட வைத்தது தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்த சொன்னது வரை அனைத்தும் அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

VCK leaders wishes and comment Actor Vijay speech regarding Ambedkar, Periyar, Kamarajar

இதன் அடுத்த கட்டமாகவே இன்று நடைபெறும் அவரது கல்வி விருதுகள் வழங்கும் விழா பார்க்கப்படுகிறது. சென்னை, நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு வைர செயினை நடிகர் விஜய் பரிசாக அளித்து பாராட்டினார். அத்துடன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த விழாவில் உரையாற்றிய விஜய் கல்வியின் முக்கியத்துவம், குண நலன்கள், தேர்தல் தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர், "நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். நீங்கள் தான் அடுத்தடுத்து நல்ல நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். நம் விரலை வைத்து நமது கண்ணையே குத்திக் கொள்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது அதுதான்.

ஒரு ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றால், ஒரு தொகுதிக்கு 15 கோடி செலவு செய்கிறார். அப்படியென்றால் அதற்கு முன் அவர்கள் எவ்வளவு சம்பாதித்து இருப்பார்கள் என்று சிந்தியுங்கள். படிப்பை தாண்டி வெளியில் என்ன நடக்கிறது என்று படித்து தெரிந்துகொள்ளுங்கள். சமூக வலைதளங்கள் வரும் செய்திகளை ஆய்வு செய்யுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என்றார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டு உள்ள பதிவில், "நடிகர் விஜய் அவர்களின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கையை தருகிறது.மாணவ- மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை தரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.அதுவும் திரு.விஜய் அவர்கள் பேசும் போது, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சமூகநீதித் தலைவர்களை படியுங்கள் என வழிகாட்டி இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் சங்கத்தமிழன், "பாராட்டுக்கள்! நடிச்சிட்டு வந்து படி என்று சொல்வதை விட! படிச்சிட்டு வந்து செயல்படு என்று சொல்வது சிறப்பு!! புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர் ஆகிய மூவரின் ஒரே எதிரி சனாதனவாதிகள் அதாவது ஜனநாயகத்தின் எதிரிகள் சங்கிகள், இன்னமும் விளக்கமாகச் சொன்னால் இன்றைய ஆர்.எஸ்.எஸின் பிஜேபி என்பதை நடிகர் விஜய் அறிவார் என்று நம்புகிறோம்! அப்படி என்றால் மோடியை அமித்ஷாவை எதிர்க்க தயாரா? தயார்.. என்றால் பாராட்டுக்கள்..." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+