2 மேயர் பதவிக்கு பிளான்.. திமுகவிடம் கேட்கும் விசிக.. ஸ்டாலினுடன் திருமா தீவிர ஆலோசனை!

திமுக கட்சியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு மேயர் பதவிகளை கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கட்சியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு மேயர் பதவிகளை கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக திமுக தனது பொதுக்குழுவை கூட்டி ஏற்கனவே ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுத்துவிட்டது. மாவட்ட செயலாளர்களை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகும்படி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுச்செயலாளருக்கு இருந்த அதிகாரம் திமுகவில் தலைவர் ஸ்டாலினுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டாலின் திமுகவில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கவோ, நீக்கவோ முடியும்.

அடுத்து பேச்சு

அடுத்து பேச்சு

இந்த நிலையில் கட்சி பிரச்சனை முடிந்துள்ளதால் திமுக தற்போது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்கலாம் என்று திமுக ஆலோசித்து வருகிறது. மேயர் பதவிகளை ஒதுக்குவது தொடர்பாக முதற்கட்ட ஆலோசனை நடந்து வருகிறது.

எத்தனை இடங்கள்

எத்தனை இடங்கள்

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 15 மாநகராட்சிகள் உள்ளன. இதனால் 15 மேயர் பதவிகள் உள்ளது. அதன்பின் திமுக 9 இடங்களில் வெற்றியை பதவி செய்ய திட்டமிட்டுள்ளது. திமுகவின் திட்டப்படி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், ஆவடி ஆகிய மேயர் பதிவுகளை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

6 மேயர் பதவிகள்

6 மேயர் பதவிகள்

மீதமிருக்கும் 6 மேயர் பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் திமுக கட்சியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு மேயர் பதவிகளை கேட்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. வட மாவட்டங்களில் இரண்டு மேயர் பதவிகளை விசிக கேட்டுள்ளது என்கிறார்கள்.

ஆலோசனை

ஆலோசனை

தற்போது விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன், மற்றும் எம்பி ரவிக்குமார் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் குறித்து இவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்கள். விசிக கட்சிக்கு திமுக பெரும்பாலும் 1 மேயர் பதவியை அளிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+