கூத்தாடி எப்படி பேசலாம்? வார்த்தையை விட்ட ஷா நவாஸ்! திருமாவும் கூத்தாடி தானே.. வலுக்கும் கண்டனம்
சென்னை: அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருமாவளவனுக்கு திமுக கூட்டணி அழுத்தம் கொடுத்ததாக பேசியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜயை கூத்தாடி என விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷா நாவாஸுசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. திரை துறையினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திருமாவளவனும் ஒரு சில படங்களில் நடித்திருப்பதால் அவரும் கூத்தாடியா எனக் கேட்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் குறித்த தகவல்கள் இடம்பெற்ற ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது.

Image credits: Vikatan
இந்த விழாவில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் விகடன் குழும நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கரின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய விசிக துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா,”விசிக தலைவர் திருமாவளவன் இங்கு இல்லை.. ஆனால் அவரின் மனசாட்சி இங்குதான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். தமிழகத்தில் புதிய கருத்தியல் தலைவராக விஜய் உருவெடுத்து இருக்கிறார். திருமா அண்ணனின் கனவு என்ன? தலித் மட்டும் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கரை, தலித் அல்லாத விஜய் வெளியிடுவது என்பதுதான்” என்றார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் தவெக தலைவருமான விஜய்,”விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் அழுத்தம் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன்.. அவருடைய மனது முழுக்க முழுக்க இன்று நம்மோடு தான் இருக்கும்” என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பேசியிருந்த திருமாவளவன்,” நான் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு காரணம் திமுக அல்ல.. திமுக அழுத்தம் கொடுத்ததாக விஜய் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு விசிக பலவீனமாக இல்லை” என கூறியிருந்தார்.
இதற்கிடையே திமுக திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்ததாக விஜய் பேசியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உச்சபட்சமாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ-வான ஆளூர் ஷா நவாஸ் ஒரு கூத்தாடி எப்படி திருமாவளவனை பற்றி பேசலாம் என கொந்தளிப்பாக பேசினார். அப்போது அதே விவாதத்தில் பங்கேற்று இருந்த தமிழக வெற்றி கழக செய்தி தொடர்பாளர் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே சினிமா துறையினரை கூத்தாடி என கேவலமாக பேசியதாக சினிமா துறையின் திரை விமர்சனங்களும் தமிழக வெற்றி கழகத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திருமாவளவனே ஒரு சில படங்களில் நடித்திருக்கும் நிலையில் அவரையும் ஆளூர் ஷாநவாஸ் விமர்சிக்கிறாரா என கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் மோகன் ஜி,” கூத்தாடி.. எவ்வளவு திமிர் இவருக்கு.. இவர் வகிக்கும் கட்சி தலைவரே ஒரு படத்துல கூத்தாடி வேஷம் போட்டவரு தான்.. இந்த வார்த்தைக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் ஷானவாஸ் அவர்கள்.. இது திரை நடிகர்களை மட்டுமல்ல, நம் கிராமத்து கூத்து கலைஞர்களையும் இழிவு படுத்தும் வார்த்தை..” என கூறியுள்ளார்.

ஷா நவாஸின் பேச்சை கண்டிக்க வேண்டுமென பதிவிட்டிருக்கும் பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த்,”தென் இந்திய நடிகர் சங்கத்திற்கு முதுகெலும்பு ஒன்று இருந்தால் ஆளூர் ஷாநாவாஸின்
இன் இந்த பேச்சை கண்டிக்கும். கூத்தாடுவது ஒன்றும் இழி செயல் அல்ல ! கூத்தாடிகள் இல்லையேல் இங்கே பலருக்கு மகிழ்ச்சி இல்லை !” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள சோனியா என்பவர்,”யாருடைய உழைப்பும் வேலையும் யாரையும் விட உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை. அடுத்தவங்களை கூத்தாடின்னு பேசுறதுக்கு முன்ன இதைலாம் பார்த்துட்டு வரவும்.” என திருமாவளவன் நடித்த சண்டைக் காட்சியை பகிர்ந்துள்ளார்.
திருமாவளவனை அரசியல்வாதியாக தான் பலருக்கும் தெரியும். ஆனால் அவரும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மின்சாரம், என்னை பார் யோகம் வரும், அன்புத்தோழி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மின்சாரம் படத்தில் தமிழ்நாடு முதல்வராக திருமாவளவன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications