’கூத்தாடி’ வார்த்தை விட்ட ஷா நவாஸ்! கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணியில்லை..விளாசிய ப்ளு சட்டை மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் குறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கூத்தாடி என விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸுக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் திருமாவளவனும் சில படங்களில் நடித்துள்ள நிலையில், தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கும் திரையுலகினரை அழைத்து பேச சொல்கிறார், அப்பதெல்லாம் உங்களுக்கு கோபம் வரவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.

சென்னையில் கடந்த 6ஆம் தேதி எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

blue sattai maran aloor shanavas vijay

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சிகள் பேசிய விஜய் திருமாவளவனுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தம் இருப்பதாய் தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது எனக் கூறியிருந்தார்.

மேலும் இதே கருத்தினை தான் முன்னதாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி விவாதம் ஒன்றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏவான ஆளூர் ஷா நவாஸ், ’ஒரு கூத்தாடி எப்படி திருமாவளவன் பற்றி பேசலாம்’ என கோபமாக பேசினார். அதே விவாதத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஷா நவாஸுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இயக்குனர் பேரரசு, ஆர்வி உதயகுமார், மோகன் ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருமாவளவனும் சில படங்களில் நடித்துள்ள நிலையில், தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கும் திரையுலகினரை அழைத்து பேச சொல்கிறார், அப்பதெல்லாம் உங்களுக்கு கோபம் வரவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,”சில தினங்களுக்கு முன் நடந்த விவாத நிகழ்ச்சியில் விஜய்யை கூத்தாடி என கோபமாக சாடினார் விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ்‌ விவாத நிகழ்ச்சிகளில் நாகரீகமாகவும், அமைதியாகவும் பேசும் மிகச்சிலரில் இவரும் ஒருவர். ஆனால் இம்முறை பொறுமை இழந்து இப்படியொரு வார்த்தையை பேசியுள்ளார். சினிமா நடிகர்களை கட்சியில் சேர்ப்பது, பிரச்சாரத்திற்கு அழைப்பது, வெற்றிக்காக வாய்ஸ் தர சொல்வது, கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் அருகே அமர வைப்பது, அவர்களின் படங்களை ப்ரிவியூ ஷோ பார்ப்பது.‌


அரசியல் மேடைகளில் நடிகர்களை போல உள்ளவர்களை ஆட வைப்பது.. என அனைத்திற்கும் அவர்களை ஏன் அழைக்கிறீர்கள்? உங்கள் தலைவர் கூட படங்களில் படித்துள்ளார். ப்ரிவியூ ஷோ பார்த்து விமர்சனம் சொல்கிறார். தனது பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு திரையுலகினரை அழைத்து பேச சொல்கிறார். அப்போதெல்லாம் நடிகர்கள் மீது உங்களுக்கு கோபம் வரவில்லையா? கூத்தாடி எனும் வார்த்தை எப்படி உங்களைப்போன்ற சட்டம் படித்தோருக்கு கூட இழிவான சொல்லாக மாறியது?

வேறு துறையை அல்லது சமூகத்தை சேர்ந்தோரை இப்படி பேசியிருந்தால்.. போராட்டம் வெடித்திருக்கும். நீங்களும் உடனே மன்னிப்பு கேட்டிருப்பீர்கள். ஆனால் சினிமாக்காரர்களிடம் ஒற்றுமை இல்லாததால்.‌ இப்படி பேசியுள்ளீர்கள். இதை கண்டிக்க ஒரு நடிகருக்கும் திராணி இல்லை. அதில் ஆச்சர்யமும் இல்லை. நேற்று நடந்த சினிமா நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் மட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

வரும் தேர்தலில் சினிமா சம்மந்தப்பட்ட எவரும் உங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டாம், எங்களுடன் மேடையேற வேண்டாம். இனி சினிமா சார்ந்த நிகழ்வுகளில் நாங்கள் பங்கேற்பதில்லை என உறுதியளிக்க இயலுமா? தங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+