விசிக ஆபிஸில் புதிய மாற்றம்.. முக்கிய முடிவுக்கான சிக்னலா இந்த சோபா?
சென்னை: சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் அவர்களிடம் இல்லை. காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. சிபிஎம், சிபிஐ, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. சிபிஎம், சிபிஐ கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. விசிக நிலைப்பாட்டும் விரைவில் வெளியாகவுள்ளது. விசிக அலுவலகத்தில் புதிய சோபா ஒன்று வந்திறங்கியுள்ளது. விசிக அறிவித்த பிறகு விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் அங்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தினசரி பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தவெகவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதால் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்நாத் அர்லேக்கர் உறுதியாக உள்ளார். தவெகவுக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஐயூஎம்எல், அமமுக தவெகவுக்கு ஆதரவில்லை என கூறிவிட்டனர். விசிக தங்களின் நிலைப்பாட்டை இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கவுள்ளனர்.

விசிக நிலைப்பாடு
இதற்காக அசோக்நகரில் உள்ள விசிக அலுவலகம் பரபரப்பாக உள்ளது. 300க்கும் மேற்பட்ட விசிகவினர் அவர்களின் அலுவலகத்தில் திரண்டுள்ளனர். தவெக விஜய்க்கு ஆதரவாகவும், திருமாவளவனை வரவேற்றும் விசிக தொண்டர்கள் பதாகைகளை ஏந்தியபடி நின்றுள்ளனர். திருமாவளவனின் அறிவிப்பை தவெக, விசிக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் விசிக அலுவலகத்தில் திடீரென புதிய சோபா வந்திறங்கியுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்த பிறகு, தவெக தலைவர் விஜய் விசிக அலுவலகத்திற்கு நேரடியாக வருகை புரியவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக தான் சிவப்பு நிறத்தில் ஒரு புதிய சோபா வண்டியில் வந்து இறங்கியுள்ளது. அதனை விசிக அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
புதிய சோபா
விசிக அலுவலகத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள திருமாவளவன் அறையில் இந்த சோபா வைக்கப்பட்டுள்ளது. விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் அமர்ந்து பேசுவதற்காக தான் சோபா வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிகுறிகள் மூலம் விசிக மாற்றத்திற்கு தயாராகிவிட்டது, தவெகவுக்கு ஆதரவு வழங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டுது என்றே விசிக அலுவலக சூழல்கள் உணர்த்துகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications