எடப்பாடியை கண்டுகொள்ளவே இல்லையே.. எத்தனை முறை அழைத்தும் வராத திருமா.. சாதித்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. ஆனால் திமுகவின் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க முயன்ற அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

அதன்படி இன்றுதான் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

VCK said no to AIADMK DMK goes in the perfect path to make alliances in the Lok Sabha election

சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.

லோக்சபா தேர்தல் 2024ல் கூட்டணி வைப்பதற்கு திமுகவிடம் முக்கியமான சில கோரிக்கைகளை விசிக கட்சி வைத்து வந்தது. அதன்படி இந்த முறை 3 தொகுதிகள் வேண்டும் என்று திமுகவிடம் விசிக கேட்டதாக கூறப்படுகிறது.

திமுகவிடம் 3ல் 1 தனி தொகுதி, 2 பொதுத்தொகுதி வேண்டும் என்றும் விசிக கேட்டதாக கூறப்படுகிறது. அதோடு 3லும் பானை சின்னத்தில் மட்டுமே போட்டியிடுவோம் என்றும் அந்த கட்சி கோரிக்கை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 2 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கீடு செய்ததாக கூறப்படுகிறது.

2 தனித்தொகுதிகளில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று விசிகஅறிவித்துள்ளது . அதே சமயம் சின்னம் தொடர்பான விவாதத்திலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று விசிக சொன்னதை திமுக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

மதிமுக கூட்டணி: இது போக திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது . லோக்சபா தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்று வைகோ அறிவித்துள்ளார். ஆனால் ராஜ்யசபா சீட் பற்றி பின்னர் பேசி முடிவெடுக்கப்படும் என்று வைகோ அறிவித்துள்ளார்.

அதிமுக பின்னடைவு; லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. ஆனால் திமுகவின் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க முயன்ற அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

விசிகவை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி முயன்று வந்தார். அதிலும் அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் அவர்களுக்குத்தான் லாபம்.அவர்களுக்கு நிறைய இடம் கிடைக்கும். வராவிட்டால் 'Dont care' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக அழைப்பு விடுத்தார்.

அதேபோல் அதிமுகவின் மற்ற தலைவர்களும் கூட்டணிக்கு விசிகவை அழைத்தனர். ஆனால் அது எதுவும் பயன் அளிக்கவில்லை. விசிக திமுக கூட்டணியிலேயே தொடர முடிவு செய்துள்ளன.

அதிமுக தாமதம்: அதேபோல் கம்யூனிஸ்டுகள், மதிமுகவையும் கூட அதிமுகவால் இழுக்க முடியவில்லை. அதோடு இல்லாமல் காங்கிரஸ் கட்சியும் திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதனால் காங்கிரசும் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்று தகவல்கள் வருகின்றன.

இன்னொரு பக்கம் லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுகளை திமுகவினர் வேகமாக எடுத்து வருகின்றனர். லோக்சபா தேர்தலையொட்டி திமுக- மார்க்சிஸ்ட் இடையே நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக 2 தொகுதிகளின் பங்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சி சார்பாக மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் ஏணி சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த தொகுதி எம்பியாக அந்த கட்சியின் ஏகேபி சின்ராஜ் உள்ளார். ஆனால் புதுமுகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்கள் கட்சியிலேயே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்பி ஏகேபி சின்ராஜ் வரும் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என கூறியுள்ளார். அதனால் புதுமுகம் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போக மதிமுகவிற்கு வழங்கப்படும் தொகுதி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை கூட்டணி உறுதி செய்யப்பட்ட கட்சிகள்:

விசிக 2
மதிமுக 1 லோக்சபா + 1 ராஜ்யசபா
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2
இந்திய கம்யூனிஸ்ட் 2
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1

காங்கிரஸ் மட்டும் பாக்கி: இதில் காங்கிரஸ் மட்டுமே மீதம் உள்ளது. அவர்களுக்கு 9- 10 இடங்கள் கொடுக்கப்படும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+