Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 10 தனித் தொகுதிகள், 5 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகளின் விருப்பப் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 29 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உள்ளிட்ட விவகாரங்கள் பிஸியாக இருந்து வருகின்றன.

vck thirumavalavan

அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக இரட்டை இலக்க எண்ணிக்கையில் கேட்டிருந்த நிலையில் அவர்களுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 8 இல் 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் தொகுதி உடன்பாட்டை நடத்தி முடித்த கையோடு 15 தொகுதிகளுக்கான உத்தேச பட்டியலையும் திமுகவிடம் விசிக வழங்கியுள்ளது. அதில் 10 தனித் தொகுதிகள், 5 பொதுத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

அவை

திருப்போரூர்
செய்யூர்
நாகை
புவனகிரி
அரூர்
காட்டுமன்னார் கோவில்
கள்ளக்குறிச்சி
குன்னம்
மயிலம்
பெரியகுளம்
சிவகங்கை
வானூர் அல்லது திண்டிவனம்
கே.வி.குப்பம்
ஸ்ரீபெரும்புதூர்
சென்னை மாவட்டம் (ஒரு தொகுதி )

ஆகியவை ஆகும்.

விசிகவின் கோட்டைகள்

காட்டுமன்னார்கோவில் , புவனகிரி: விசிக தலைவர் திருமாவளவனின் சொந்த மண் மற்றும் கட்சியின் இதயப் பகுதி. இங்கு விசிகவிற்குத் தனிப்பட்ட வாக்கு வங்கி மிக அதிகம். திமுக கூட்டணியின் வாக்குகள் இணையும்போது இங்கு வெற்றி பெறுவது எளிதாக இருக்கும்.

செய்யூர் , திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தின் இந்தத் தொகுதிகளில் தலித் மற்றும் சிறுபான்மையின வாக்குகள் அதிகம். கடந்த தேர்தல்களில் விசிக இங்கு வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

கடும் போட்டி நிலவும் தொகுதிகள் (இழுபறி)

நாகப்பட்டினம்: இங்கு இடதுசாரிகளுக்கும் விசிக-விற்கும் இடையே தொகுதிப் பகிர்வில் போட்டி ஏற்படலாம். எனினும், டெல்டா பகுதியில் திமுக பலமாக இருப்பதால் கூட்டணி பலம் விசிக-விற்கு உதவும்.

மயிலம், வானூர் அல்லது திண்டிவனம்: இந்தத் தொகுதிகள் பாமக-வின் பலமான இடங்கள். சசிகலா-பாமக கூட்டணி அமையும் பட்சத்தில், இங்கு விசிக வேட்பாளர்கள் கடும் சவாலைச் சந்திக்க வேண்டியிருக்கும். சமூக ரீதியான வாக்குகள் இங்கு வெற்றியைத் தீர்மானிக்கும்.

அரூர், கள்ளக்குறிச்சி: தருமபுரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிமுக - பாமக வாக்குகள் ஒருசேர நின்றால், விசிக-விற்கு இது "நெருப்பு வளையமாக" இருக்கும்.

புதிய களங்கள் (சவால்கள்)

சென்னை (எழும்பூர்/பெரம்பூர்): சென்னையில் திமுகவின் வாக்கு வங்கி மிக வலுவானது. ஆனால், தவெக (விஜய் கட்சி) நகர்ப்புற இளைஞர்களின் வாக்குகளைப் பிரித்தால், அது விசிக-விற்குச் சிறு பின்னடைவை ஏற்படுத்தலாம்.

பெரியகுளம் , சிவகங்கை: தென் மாவட்டங்களில் விசிக கால் பதிக்க விரும்பும் இடங்கள். அதிமுக-அமமுக கூட்டணி இங்கு வலுவாக இருப்பதால், தேவர் சமூக வாக்குகளை மீறி விசிக இங்கு வெற்றி பெறுவது ஒரு சவாலான காரியம். எனினும் திமுகவில் ஓபிஎஸ் இணைந்துள்ளதால் அந்த வெற்றி எளிதாகும் என தெரிகிறது.

ஸ்ரீபெரும்புதூர்: தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் தொழிலாளர் வாக்குகள் கை கொடுக்கும். ஆனால், அதிமுக இங்கு பாரம்பரியமாகப் பலமாக உள்ளது.

விசிகவின் இந்தப் பட்டியல் அவர்கள் கடந்த காலங்களில் தனிச் சின்னத்திலோ அல்லது உதயசூரியன் சின்னத்திலோ போட்டியிட்டு கணிசமான வாக்குகள் வாங்கிய இடங்களை மையமாக வைத்தே தயார் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டம்: திமுக ஏற்கனவே விசிகவிற்கு 8 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. எனவே, இந்தப் பட்டியலில் உள்ள 15 இடங்களில் எவற்றை திமுக விட்டுக் கொடுக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வி.

கடந்த 2024 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்துவிட்டு 65 பேர் உயிரிழந்தனர். மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கள்ளக்குறிச்சி திமுக கூட்டணி கட்சியாக இருந்தாலும் விசிக போராட்டம் நடத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+