பொறுத்திருந்து பாருங்க.. பட்டென டோனை மாற்றிய திருமாவளவன்.. விஜய்யுடன் கூட்டணி? இறங்கி வரும் விசிக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 இல் விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். விஜய்யும் - திருமாவும் ஒரே மேடையில் தோன்ற உள்ள நிலையில்தான் விஜய் தனது டோனை மாற்றி உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஸ்ரீமத் போகர் சமாதியில் சிறப்பு தரிசனம் செய்தார். தொடர்ந்து சிறிது நேரம் தியானமும் செய்தார். பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் சார்பாக, கோவில் மரியாதை செய்யப்பட்டு, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

இதில்தான் 2026 இல் விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். இத்தனை நாட்களாக கூட்டணி இல்லை என்று மறைமுகமாக மறுத்து வந்த விசிக திருமாவளவன்.. இந்த முறை நேரடியாக பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

விஜய்யால் வந்த மோதல்: உள்கட்சி நெருக்கடிகளாலும் திமுகவின் அழுத்தங்களாலும் இரண்டு பக்க இடிகளை எதிர்கொண்டு வருகிறார் திருமாவளவன் என்கிறார்கள் வி.சி.க. நிர்வாகிகள். பிரபல பத்திரிகை குழுமமும் வி.சி.க. வின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனின் வாய்ஸ் ஆஃப் காமென் அமைப்பு இணைந்து அம்பேத்கர் பற்றிய கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை டிசம்பர் 6-ந்தேதி வெளியிடுகின்றன.

இந்த நிகழ்வில் த.வெ.க. தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட அதனை பெற்றுக்கொள்கிறார் திருமாவளவன். திமுகவை தனது அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்தியிருக்கும் விஜய்யுடன் ஒரே மேடையில் திருமாவும் பகிர்ந்துகொள்ளவிருப்பதை திமுக தலைமை அவ்வளவாக ரசிக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல: ஒட்டுமொத்த திமுக தலைவர்களும் இதில் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இந்த அதிருப்திதான், புதுசு புதுசாக வர்றவனெல்லாம் திமுகவை அழிக்க நினைக்கிறானுங்க. அதெல்லாம் முடியாது என்று கோப்பத்தை வெளிப்படுத்தினார். விஜய்யை மனதில் நிறுத்தியே இந்த கோபத்தை காட்டினார் ஸ்டாலின்.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது, விஜய்யை ஸ்டாலின் நேரடியாக தாக்கினால், முதல்வரும் கூட்டணிக்கட்சியின் தலைவருமான ஸ்டாலினே தாக்கும் விஜய்யுடன் மேடையை பகிர்ந்து கொள்வதை திருமா தவிர்ப்பார் என்கிற எதிர்பார்ப்பில் வெளிப்பட்ட கோபம் அது. ஆனால், திருமாவோ, முதல்வரின் கோபத்தில் இருக்கும் அர்த்தத்தை உணர்ந்து, திமுக கூட்டணியில் நீடிப்போம் என சொன்னார்.

ஆனால், விஜய்யுடன் ஒரே மேடையில் இருப்பதை தவிர்க்க நினைக்கவில்லை. இது திமுகவை மேலும் அதிர்ப்தியடைய வைத்துள்ளது. திமுகவுக்கும் விசிகவுக்குமான அரசியலை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் அமைச்சர் எ.வ.வேலுவிடம், திருமாவின் அரசியல் வேறு மாதிரி இருக்கும் போல ! அந்த பையனோடு (விஜய்) நெருக்கம் காட்டுவதற்காக நம்மளை உரசுகிறாரா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்டாலின்.

இதனை திருமாவிடம் வெளிப்படுத்தியுள்ளார் அமைச்சர் வேலு. குறிப்பாக, திமுகவை எதிரியாக கருதும் நடிகருடன் நீங்கள் வெளிப்படையாக மேடை ஏறுவதை திமுக தொண்டர்கள் ரசிக்க மாட்டார்கள். பிறகு உங்கள் முடிவு என்கிற ரீதியில் வேலுவின் அழுத்தம் இருந்துள்ளது. திமுகவின் அழுத்தம் இப்படி ஒரு புறம் என்றால், திமுகவின் ஆதரவு நிலைப்பாட்டில் எப்போதும் இருந்து வரும் வி.சி.க.வின் சீனியர்கள் சிலர், திமுக கூட்டணியில்தான் நாம் இருப்போம் என்பதை அழுத்தமாக, திட்டவட்டமாக சொல்லி வரும் நீங்கள், விஜய்யுடன் கைக்குலுவது நாகரீகமானதல்ல.

விஜய் முக்கியம் எனில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக வெளிப்படையாக தெரிவித்துவிடலாம். கூட்டணியில் இருந்துகொண்டு திமுக ரசிக்காத ஒரு விசயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டுமா? என்று விவாதித்துள்ளனர். திமுகவை கடுமையாக எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமா கொடுத்து வரும் முக்கியத்துவத்தை விரும்பாத சீனியர்கள் தான் இந்த கருத்தை திருமாவிடம் வலியுறுத்துகின்றனர்.

ஆக, இப்படி, திமுகவிடமிருந்து வருகிற அழுத்தம், உள்கட்சியிலிருந்து கொடுக்கப்படும் நெருக்கடி என இரண்டு இடிகளை எதிர்கொண்டுவரும் திருமா, சம்மந்தப்பட்ட புத்தக விழா குறித்து தனது விளக்கத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் கூட , விழா நிகழ்வு குறித்து விவரித்துவிட்டு, சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம் என்றுதான் விளக்கியிருக்கிறாரே தவிர, விஜய்யுடன் மேடையை பகிர்ந்துகொள்ளும் முடிவை அவர் பரிசீலிக்கவில்லை. சோசியல் மீடியாவில் அவர் பதிவு செய்த கருத்தினை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதை பார்த்து விட்டு உதடு பிதுக்கியிருக்கிறார் ஸ்டாலின் என்கிற தகவல்கள் கிடைக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+