"முடிஞ்சதாமே".. எடப்பாடியுடன் "அவர்" சேர போகிறாரா.. ஒரே வார்த்தையால் பதறிய தலைவர்கள்.. 2 காரணங்கள்
எடப்பாடி பழனிசாமி சொன்ன மெகா கூட்டணி குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன
சென்னை: எடப்பாடி பழனிசாமி சொன்ன மெகா கூட்டணியில் எந்த கட்சியில் இடம்பெற போகின்றன என்று தெரியவில்லை.. ஆனால், அதுகுறித்த விவாதங்களும், கருத்துக்களும், மறுப்புகளும் இணையத்தில் வட்டமடித்து கொண்டே இருக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் கூட்டத்தில், எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி என்று பேசியிருந்தார்.
அதிமுக உட்கட்சி விவகாரம் தீர்ந்தால் மட்டுமே, கூட்டணி வலுவடையும் என்ற நிலை உள்ளது.. அப்படி இருக்கும்போது, மெகா என்று எதை முன்னிறுத்தி எடப்பாடி பேசினார் என்ற சந்தேகம் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

பச்சமுத்து
அநேகமாக, டிடிவி + பாஜக + பாமக + புதிய தமிழகம் + பாரிவேந்தர் + என இத்தனை பேரையும் ஒன்றிணைக்கலாம் என்ற முடிவுடன் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்க வாய்ப்புள்ளதாக ஒரு பேச்சு உள்ளது.. மற்றொருபக்கம் எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துள்ளதாலும், பாஜகவை கழட்டிவிட்டே தேர்தல் கூட்டணியை அமைப்பார் என்றும் விவாதங்கள் எழுந்து வருகின்றன.. ஆக, எடப்பாடி பழனிசாமி யாருடன் கூட்டணி வைப்பார்? எந்த கட்சிக்கெல்லாம் வாய்ப்பு என்ற யூகங்கள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.

பதறிய திருமா
அதேசமயம், எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு, திமுக கூட்டணியையே அசைத்து விட்டது என்றே சொல்லலாம்.. காரணம், கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்களும், காங்கிரசும் திமுகவுடன் உரசல் போக்கை கொண்டிருப்பதாகவும், சமீபகாலமாகவே திமுகவுடன் சுமூக உறவு இல்லாமல் அதிருப்திகள் வெடித்து வருவதாகவும் தகவல்கள் பரவின.. எனவே, இந்த கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைப்பது சந்தேகம் என்றும், எடப்பாடியுடன் இணையவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.. கடந்த வாரம் சில அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தை வலியுறுத்தியிருந்தனர்.

தவிடுபொடி
எடப்பாடி என்ன நினைத்து மெகா கூட்டணி என்றாரோ தெரியவில்லை, ஆனால், அந்த வார்த்தை திமுக கூடாரத்தை அசைத்து விட்டது என்றார்.. அதனால்தான், இதுபோன்ற தேவையற்ற பேச்சுக்களையும், யூகங்களையும் நொறுக்குவதற்காக, கேஎஸ் அழகிரியும், திருமாவளவனும் மாறி மாறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதாக சொல்கிறார்கள்.. "அதிமுகவை கரைய விட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகியாக செயல்படாமல் பாஜக நிர்வாகியாக செயல்படுகிறார் என்று திருமாவும், அதிமுக இப்போது பாஜக மோடியின் மறுஉருவமாக உள்ளது என்று கேஎஸ் அழகிரியும் காட்டமாக பேட்டிகளை தந்திருந்ததும் இந்த யூகங்களை தவிடு பொடியாக்குவதற்காகத்தானாம்.

PLAN A
இதற்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, எம்பி தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கிறது.. இப்போதே கூட்டணி பேச்சு, அதிருப்திகள் என்று பேச ஆரம்பித்துவிட்டால், அது தங்களுக்கு சிக்கலாகிவிடும் என்று கட்சிகள் யோசிக்கின்றனவாம்.. அதிமுக விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், கூட்டணி பற்றி பேசவும் யாருக்கும் தற்சமயம் எண்ணம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.. மேலும் இதுபோன்ற யூகங்கள் எல்லாம் தேவையில்லாமல், நல்லா இருக்கிற கூட்டணியை முறித்து கொண்டு விடுவதுபோலவும், திமுகவை சங்கடப்படுத்தி விடுவது போலவும் ஆகிவிடும் என்று கூட்டணிகள் நினைக்கின்றதாம்.

PLAN B
மற்றொருபுறம், கம்யூனிஸ்ட்கள், விசிக, காங்கிரஸ் போன்றவை எல்லாம் எடப்பாடியுடன் கூட்டணி வைக்கக்கூடும் என்பன போன்ற தகவல்களை, எடப்பாடி தரப்பின் ஐடி விங் மூலமாகவே பரப்பப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.. இதனால், கூட்டணி நிலைப்பாட்டையும், அக்கட்சிகளின் நிலைப்பாட்டையும், கள நிலவரத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்பதாலேயே, இப்படி வேண்டுமென்றே சிலர் பரப்பி வருகிறார்களாம்.. அதேசமயம், தேர்தல் சமயத்தில் திமுக கூட்டணி, காங்கிரசுக்கு எத்தனை சீட் தரும் என்று தெரியவில்லை.

கன்பியூஷன்
கடந்த முறை 10 சீட்களை லட்டுபோல திமுக தூக்கி தந்த நிலையில், இந்த முறை அந்த அளவுக்கு தாராளம் காட்டுமா என தெரியாது.. ஆனால், அதிகப்படியான சீட்களை வாங்குவோம் என்று அழகிரி விடாமல் சொல்லி கொண்டிருப்பதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. மற்றொருபக்கம், அதிமுகவில் இருந்து விலகி, திமுக பக்கம் நெருங்கி செல்வதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. அதாவது மெகா கூட்டணி என்று சொன்னாலும், எடப்பாடி பக்கம் யார் தற்போது இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்கிறார்கள்.

புரியாத புதிர்
தேமுதிக அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது, பாமக அதிமுகவுடன் கூட்டணி விரிசலை ஓபனாக சொல்லிவிட்டது.. பாரிவேந்தரும் பாஜக பக்கம் போவதாக தெரிகிறது.. திமுக கூட்டணியில் இருந்தும், சரமாரி பதிலடிகள் வந்துவிட்டன.. அப்படியானால், எடப்பாடி பக்கம் யார்தான் இருக்க போகிறார்கள் என்பது புதிராகவே உள்ளது.. ஆக, எப்படி பார்த்தாலும் எடப்பாடி சொன்ன அந்த மெகா கூட்டணியில் யார் யார் உள்ளனர் என்பது இதுவரை தெரியாவிட்டாலும், அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்கு, இத்தனை தலைவர்களும் பதறியடித்து பதிலளிக்க வேண்டிய நிலைமை ஆகிவிட்டதையும், இங்கு நாம் கவனிக்க வேண்டி உள்ளது..!!
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications