இரங்கல் அறிக்கை கூட தரவில்லை.. தனியார் பள்ளிகள் மீது விசிக வன்னியரசு விமர்சனம்

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குறித்து விசிக வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல மாணவிகள் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மர்மமான முறையில் இறந்துள்ளனர். மாணவிகளின் உயிருக்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட தர இரக்கமில்லையா? என்று விசிக காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது.

Recommended Video

    Sylendra Babu பேட்டி | Kallakurichi School Girl வழக்கு CBCID-க்கு மாற்றம் | TamilNadu

    சின்னசேலம் மாணவி உயிரிழப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துள்ளது.. இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் வர உள்ளது.. இதையடுத்து, கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்றைய தினம் அறிவித்தது..

    அத்துமீறல்

    அத்துமீறல்

    இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெற்றோர்கள்‌ என்ற போர்வையில்‌ மேற்கண்ட பள்ளிக்குள்‌ சில சமூக விரோத கும்பல்‌ அத்துமீறி நுழைந்து பள்ளியின்‌ மீது ஏற்கனவே இருந்த காழ்ப்புணர்ச்சியால்‌ பள்ளியின்‌ பாதுகாப்பிற்கு வந்த காவல்‌ துறையினரை கல்‌ வீசி தாக்கியும்‌ மற்றும்‌ காவல்துறை வாகனங்களை தீ வைத்து கொளுத்தியும்‌, பள்ளியின்‌ உடைமைகளை கட்டிடம்‌ தவிர மற்ற அனைத்து உடைமைகளையும்‌ (மாணவர்களின்‌ சான்றிதழ்கள்‌ உட்பட) கடுமையாக சேதப்‌படுத்தியும்‌ வன்முறையில்‌ ஈடுபட்டுள்ளனர்‌.

     உடைமைகள்

    உடைமைகள்

    தவறு செய்தவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ தண்டிக்கப்பட வேண்டும்‌ என்பதில்‌ எந்தவித மாற்று கருத்தும்‌ எங்களுக்கு இல்லை. அதற்காக இது போன்று நிகழ்த்தப்படும்‌ வன்முறைகளை ஒருபோதும்‌ ஏற்றுக்கொள்ள முடியாது.. தனியார்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கும்‌, பள்ளியின்‌ உடைமைகளுக்கும்‌ அதில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌, ஊழியர்கள்‌ அனைவரின்‌ பாதுகாப்பு தற்போது கேள்விக்‌ குறியாக மாறி உள்ளது.

     கருப்பு வண்ண பேட்ஜ்

    கருப்பு வண்ண பேட்ஜ்

    வரும்‌ காலங்களில்‌ இது போன்று நிகழாத வகையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள தனியார்‌ பள்ளிகளின்‌ நிர்வாகிகள்‌ மற்றும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ நாளை (18.07.2022) கருப்பு வண்ண பேட்ஜ்‌ அணிந்து அந்தந்த மாவட்டங்களில்‌ உள்ள ஆட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர் அவர்களை நேரில்‌ சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதால்‌ நாளை தமிழக முழுவதும்‌ உள்ள தனியார்‌ பள்ளிகள்‌ இயங்காது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    ஆனால், தனியார் பள்ளிகளை முன் அனுமதியின்றி நாளை மூடினாலோ விடுமுறை விட்டாலோ கடும் நடவடிக்கை பாயும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்தது.. இதனிடையே, தனியார் பள்ளிகள் மீது பொதுமக்களின் கோபம் திரும்பி வருகிறது. வன்முறை சம்பவங்களுக்கு அரசிடம் சொல்லி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம்.. அதை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளை மூடுவதென்பது மக்களை ஏமாற்றும் செயல் என்கிறார்கள்.. .தனியார் பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அளித்தால் கள்ளக்குறிச்சி பள்ளியின் செயல்பாடுகள் சரி என்று ஆகிவிடாதா? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

     விசிக - வன்னியரசு

    விசிக - வன்னியரசு

    இதுகுறித்து விசிகவும் கருத்து தெரிவித்துள்ளது.. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு பதிவிட்டுள்ள ட்வீட்டில், " பல மாணவிகள் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மர்மமான முறையில் இறந்துள்ளனர். மாணவிகளின் உயிருக்கு ஒரு இரங்கல் அறிக்கை கூட தர இரக்கமில்லையா? தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு கொள்ளையர்களின் கூடாரமா? கொலையர்களை பாதுகாக்கும் கூடாரமா?# ஶ்ரீமதிக்கு_நீதி_வேண்டும்" என்று கேட்டுள்ளார்.. இதற்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் உரிமைகளை பறிக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+