"சங்கராச்சாரியார்கள்".. ஸ்டாலின் ஸாரி கேட்கணுமா.. "2 பேரை" கட்டிப்பிடிச்சீங்களே.. விசிக ஒரே போடு
பாஜகவின் திருப்பதி நாராயணனுக்கு விசிகவின் வன்னியரசு பதிலடி தந்துள்ளார்
சென்னை: திமுகவை சீண்டி கொண்டிருக்கும், பாஜகவுக்கு விசிகவின் வன்னியரசு காட்டமான கேள்வி ஒன்றை ட்விட்டரில் கேட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை, சுப்ரீம் கோர்ட் விடுவித்துள்ளது... இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின்போது, பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து தோளில் தட்டிக் கொடுத்தார்.

ஸ்டாலின்
இது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.. காங்கிரஸ் கட்சி மென்று விழுங்கி கொண்டிருக்கிறது.. கூட்டணிக்கு உள்ளே நட்பையும், வெளியே எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகிறது.. கூட்டணி கட்சியாக இருந்தாலும் ராஜீவ் கொலையை நியாயப்படுத்துவது போல் இந்த நிகழ்வுகள் இருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.. பதவிக்காக அலையும் தலைவர்களே கூட்டணியை உதறிவிட்டு வெளியே வாருங்கள் என்ற முழக்கமும் சோஷியல் மீடியாவில் வெடித்து கிளம்பி வருகிறது..

2ம் கட்ட தலைவர்கள்
இந்த விவகாரத்தில் தலைவர்கள் அனைவரும் மவுனம் காத்து வருகிறார்கள். ஆனால் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறார்கள்... இதற்கு நடுவில் பாஜக உள்ளே புகுந்து, காங்கிரஸை சீண்டிவிட்டு கேள்வி கேட்டு வருகிறது.. "திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்ள காங்கிரஸ் தயாரா? முதுகெலும்பற்றவர்களின் செயலாகவே காங்கிரசின் நடவடிக்கை இருக்கிறது காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைவிட ஸ்டாலின்தான் முக்கியம் போல" என்றெல்லாம் சூடேற்றி வருகிறார்கள்.

அழகிரி திட்டவட்டம்
ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் நொந்து போயுள்ள காங்கிரஸ் கட்சிக்கு, பாஜகவின் சீண்டலால் மேலும் கொதிப்பு ஏற்பட்டுள்ளது.. "திமுக காங்கிரஸ் கூட்டணி வேறு, கொள்கை வேறு.. அவர்கள் கொள்கையை அவர்கள் சொல்கிறார்கள்.. பேரறிவாளன் விடுதலைக்கும், கூட்டணிக்கும் எந்த சம்மதமுமில்லை என்று கேஎஸ் அழகிரி திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.. ஆனாலும் பாஜக விடுவதாக இல்லை.

நாராயணன் ட்வீட்
தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி இதை பற்றி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், முன்னாள் பிரதமரை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியை ஆரத்தழுவி வரவேற்றது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொறுப்பற்ற செயல். இந்திய மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இதற்குதான் வன்னியரசு நச்சென ஒரு கேள்வி கேட்டுள்ளார்..

சங்கர்ராமன்
"அப்பாவி சங்கர்ராமன் படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயேந்திரன், விஜயேந்திரன் விடுதலையான பின் கட்டித்தழுவி வரவேற்றது தவறில்லையா?.. சங்கர்ராமன் படுகொலையை ஞாயப்படுத்திய குற்றவாளிகளை ஆதரிக்கும் பார்ப்பனக்கும்பல் #பேரறிவாளன் விடுதலை பற்றி பேச தகுதி இருக்கா? என்று வன்னியரசு காட்டமாக கேட்டுள்ளார்... இதற்கு பல்வேறு தரப்பில் கமெண்ட்கள் குவிந்து வந்தாலும், சிலர் வன்னியரசுவிடமே கேள்வி கேட்டுள்ளனர்.

ஜெயேந்திரர்
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை.. ஆகையால் அவர் நிரபராதி என கூறி விடுதலை செய்தனர்... ஆனால் பேரறிவாளனை நிரபராதி என்று தீர்ப்பில் நீதி அரசர்கள் எங்குமே குறிப்பிடவில்லையே.. குற்றவாளி அல்ல என்று வெளியே வந்தவருக்கும், குற்றவாளி என்று தண்டனை பெற்றவருக்கும் வித்தியாசம் இல்லையா? என்று கேட்டுள்ளார்.. மேலும் சிலர், "பார்ப்பனர் என்று ஏன் சாதி பெயரை சொல்றீங்க? சாதி பெயரை சொன்னால் வன்கொடுமை சட்டம் இருக்கிறது" என்றும் எச்சரித்து வருகின்றனர்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications