'இல்லாத பேயை காட்டி வியாபாரம் பண்ணும் பூசாரி'.. அண்ணாமலையை விமர்சித்த விசிக வன்னியரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை : முனி, காஞ்சனா பேய் திரைப்படத்தோடு ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயலை விமர்சித்த விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், :"முனி போன்ற பேய்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்ததால், அடுத்தடுத்து part 1, part2 என எடுக்கிறார்கள். பேய் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல; அந்த பயத்தை வைத்து வியாபாரமாக்குவது தான் முக்கியம்.

VCK Vanniarasu who compared Annamalai to a ghost film over DMK files part 2

அதே போலத்தான் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை DMK Files part 1 என வெளியிட்டார் பாஜக தலைவர் திரு.அண்ணாமலை.

பொதுவாக,Part 1 வெற்றி அடைந்தால் தான் அடுத்த part வெளியிடுவார்கள்.

ஆனால்,முதல் பாகமே தோல்வி அடைந்து விட்டது. திமுக அமைச்சர்களின் ஊழல் நிரூபிக்கப்படவில்லை. இல்லாத பேயை காட்டி வியாபாரம் பண்ணும் பூசாரிகளை போல அண்ணாமலை,இல்லாத ஊழலை காட்டி தமது இருப்பை நிறுவ முயற்சிக்கிறார். இதற்கு ஆளுனரும் திருநீறு அடிக்கும் கேவலத்தை செய்கிறார். அண்ணாமலை வகையறாக்களின் இந்த பேயாட்டத்தை பகுத்தறிவாளர்களான தமிழ்நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள்." இவ்வாறு வன்னியரசு பதிவிட்டுள்ளார்.

இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதன்கிழமை அன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது திமுகவை சேர்ந்த 6 அமைச்சர்களின் 3 முக்கியமான ஊழல்களை அடங்கிய கோப்புகளை பெட்டியில் வைத்து ஆளுநரிடம் ஒப்படைத்தார். திமுக பைல்ஸ் பார்ட் 2 வெளியிடப்போவதாக கூறியிருந்த நிலையில், நேற்று அண்ணாமலை இதனை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வியாழக்கிழமை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்த பெட்டியில் 6 அமைச்சர்களின் சொத்து விவரங்கள் இருக்கின்றன. இந்த 6 அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே தமிழகத்தில் ஊழல் ஒழியும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+