இது தலைவருக்கான பண்பா.. விசிகவினர் தாக்கியது என்னைதான்.. அன்று நடந்தது என்ன? விவரிக்கும் வழக்கறிஞர்!
சென்னை: அக்டோபர் 7ஆம் தேதி விசிகவினரால் தாக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜீவ் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு தலைவருக்கான பண்பு இல்லை என்று கூறிய அவர், அந்த சம்பவத்தில் திருமாவளவன் மீதுதான் தவறு என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
அக்டோபர் 7ஆம் தேதியன்று விசிக சார்பாக சமத்துவ வழக்கறிஞர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு காரில் புறப்பட்ட போது, திடீரென ஒருவர் ஸ்கூட்டரில் சாலையை மறித்தார். இதையடுத்து விசிக தரப்பினருக்கும், அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதன்பின் அந்த நபர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் பேசுபொருளானது. இந்த விவகாரத்தில் இரு தரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நான் ராஜீவ் காந்தி. விசிகவினரால் தாக்கப்பட்ட வழக்கறிஞர் நான்தான்.
விசிகவினர் என்னைப் பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றனர். அதற்கான விளக்க வீடியோதான் இது. அக்டோபர் 7ஆம் தேதி எனது அக்காவின் ஐடியை பார் கவுன்சிலில் வாங்குவதற்காக வந்தேன். நான் ஓட்டி வந்த வண்டி, வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பின்னால் வந்த கார் இடித்துவிட்டது. ஏன் இடித்தீர்கள் என்று கேட்ட போது, எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
நான் வண்டியை நிறுத்திவிட்டு ஏன் இடித்தீர்கள் என்று கேட்ட போது, கார் கண்ணாடியை இறக்கினார்கள். உள்ளே திருமாவளவன் இருந்தார். அவரை பார்த்த பின் நான் திரும்பிவிட்டேன். உடனே விசிகவினர் வந்து என்னை தாக்க தொடங்கிவிட்டார்கள். அங்கிருந்த காவல்துறையினர் என்னை பாதுகாப்புக்காக பார் கவுன்சில் செல்லுமாறு கூறினார்கள். நான் பார் கவுன்சில் வந்துவிட்டேன்.
கூட்டமாக சேர்ந்து என்னை தாக்கினீர்கள்.. தடுக்க வந்த போலீஸையும் தாக்கினீர்கள்.. ஒரு கட்சியின் தலைவர்.. எம்பி.. உங்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாகனத்திற்கு பின்னர் தான் நீங்கள் வந்திருக்க வேண்டும்.. முன்னாடி வந்தது உங்கள் தப்பு.. உங்களை தவறை மறைத்து என் வாகனத்தை இடித்து, அங்கேயே எளிதாக முடிய வேண்டிய ஒரு விஷயத்தை வன்மத்தை தூண்டும் வகையில் பேசி அரசியல் ஆதாயம் தேடுகிறீர்கள்.
சங்கினு சொல்றீங்க.. பாஜக ஆர்எஸ்எஸ் கைகூலினு சொல்றீங்க.. பாலியல் குற்றவாளினு சொல்றீங்க.. அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் அவதூறு பரப்புகிறீர்கள்.. இதனை சட்டப்படி எதிர்கொள்வேன்.. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு மாதமாக அமைதி காத்தேன். ஏனென்றால் ஒரு கட்சியின் தலைவர்.. தவறை உணர்ந்துவிடுவார் என்று காத்திருந்தேன்..
ஆனால் விபத்தை திசை திருப்பும் வகையில் அவரும், விசிகவினர் பேசி வருகின்றனர். அது கண்டிக்கத்தக்கது. திருமாவளவன் இப்படி நடந்து கொண்டது வருத்தமாக உள்ளது. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய் உள்ளிட்டோரே பல்வேறு சம்பவங்களின் போது மன்னிப்பு கேட்டுள்ளனர். அதுதான் தலைவர்களுக்கான பண்பு.. ஆனால் திருமாவளவன் நடந்து கொண்டது தலைவருக்கான பண்பு அல்ல என்று தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications