கோடி கோடியாக கொட்டிக்கொடுத்த வேதாந்தா நிறுவனம்.. எந்த கட்சிக்கு? வெளியான தேர்தல் பத்திர விவரம்!
சென்னை; உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.பி.ஐ. அளித்த தேர்தல் பத்திர விபரங்களை, தனது இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம். இதில் வேதாந்தா நிறுவனம் பல கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை கட்சிக்கு அல்லது கட்சிகளுக்கு கொடுத்துள்ளது அம்பலம் ஆகி உள்ளது.
தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12 வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது. இந்த நிலையில் இன்று மாலை அந்த பத்திரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது.

சலுகை; தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் முக்கியமான சலுகை ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது.
அதன்படி தேர்தல் பாத்திரங்களை பயன்படுத்தி நிதி கொடுத்த நிறுவனங்கள் பெயர்களை வெளியிட வேண்டும். அவர்கள் கொடுத்த பணத்தை வெளியிட வேண்டும். அதேபோல் எந்த கட்சி எல்லாம் பணம் பெற்றனர் என்றும் வெளியிட வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பதை காட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று சலுகை கொடுத்துள்ளது.
எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பதை காட்ட கூடுதல் அவகாசம் எடுக்கும் என்பதால் எஸ்பிஐ கூடுதல் நேரம் கேட்டது. இதனால் நாளையே கொடுங்கள்.. ஆனால் இந்த விவரம் வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பது வெளியாகாமல் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
வேதாந்தா: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.பி.ஐ. அளித்த தேர்தல் பத்திர விபரங்களை, தனது இணையதளத்தில் வெளியிட்டது தேர்தல் ஆணையம். இதில் வேதாந்தா நிறுவனம் பல கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை கட்சிக்கு அல்லது கட்சிகளுக்கு கொடுத்துள்ளது அம்பலம் ஆகி உள்ளது.
கடந்த வருடம் வேதாந்தா நிறுவனம் தனி தனியாக 1 கோடி என்று பல கோடி ரூபாய்களை நிதியாக வழங்கி உள்ளது. அணில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனம் ஆண்டு தவறாது தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை வழங்கியுள்ளது. ஆனால் வேதாந்த நிறுவனம் யாருக்கு நிதி வழங்கியது என்பது பற்றி விவரங்கள் வெளியாகவில்லை. இது எந்த கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் என்பது தெரியாது.,
பாஜக அதிக நிதி: 2022-23 நிதியாண்டில், பாஜக கிட்டத்தட்ட ₹ 1,300 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது, அதே காலகட்டத்தில் காங்கிரஸுடன் ஒப்பிடும்போது இது ஏழு மடங்கு அதிக நிதி ஆகும்.
இந்த ஆண்டிற்கான பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 2,120 கோடியாகும், தேர்தல் பத்திரங்களில் மொத்தத்தில் 61 சதவீதம் பாஜகவிற்கு சென்றுள்ளது. முந்தைய 2021-22 நிதியாண்டில், பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 1,775 கோடி. 2022-23 ஆம் ஆண்டிற்கான பாஜக பெற்ற ஒட்டுமொத்த நிதி ₹ 2,360.8 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, தேர்தல் பத்திரங்கள் மூலம் வருவாயில் சரிவைச் சந்தித்து உள்ளது காங்கிரஸ். 2022-23ல் ₹ 171 கோடியை மட்டுமே காங்கிரஸ் ஈட்டியது. இது 2021-22 நிதியாண்டில் பெற்ற ₹ 236 கோடியிலிருந்து குறைந்துள்ளது.
பாஜகவிற்கு தொடர்ந்து சாதகமாக இருந்த இந்த திட்டத்தை தற்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications