முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி காலமானார்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தையான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 80. உடல் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வேதமூர்த்தி சென்னை ஓஎம்ஆரில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நள்ளிரவில் காலமானார். அவரது உடல் கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பலரும் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகிறார்கள்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடைய தந்தை பெயர் வேதமூர்த்தி. வேதமூர்த்தியை பொறுத்தவரை தி.மு.க.வின் முக்கியப் பொறுப்புகளில் இல்லை என்றாலும், அரசியல் வட்டாரங்களில் அறியப்பட்ட ஒருவர் ஆவார் .

முதல்வர் ஸ்டாலினின் சம்பந்தியான அவர், பல்வேறு அரசியல் நிகழ்வுகளிலும், பொதுநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். ஆனால் வெளி உலகிற்கு அவரை அவரை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பொதுவெளியில் அதிகம் பேசப்படாத வேதமூர்த்தி, தி.மு.க.வினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமானவர் ஆவார்.
80 வயதை கடந்த வேதமூர்த்தி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் சென்னை ஓஎம்ஆர் சாலையில்உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி நள்ளிரவில் காலமானார். சபரீசனின் தந்தை வேதமூர்த்தியின் உடல் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்மற்றும் பல்வேறு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதேபோல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
வேதமூர்த்தியை பொறுத்தவரை மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அதேநேரம் அவரது மகன் சபரீசன், முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை ஸ்டாலினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதித்யா என்ற மகன் இருக்கிறார். சபரீசன் சபரீசன் நேரடியாக அரசியல் பதவிகளில் இல்லாவிட்டாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 2019, 2021 மற்றும் 2024 தேர்தல்களில் தி.மு.க.வின் வெற்றிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தனது மாமனார் ஸ்டாலினுக்கு ஆலோசகராகவும், வியூக நிபுணராகவும் செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications