தனது ரசிகை உயிரைக் காப்பாற்ற கூட முன்வராதவர் விஜய்.. மன்னிப்பு கேட்கணும்.. வீரலட்சுமி ஆவேசம்
சென்னை: தன்னுடைய ரசிகை உதவி கேட்டும் காப்பாற்ற முன் வராதவர் நடிகர் விஜய் என தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி தீக்குளித்த நிலையில் தீக்காயங்களோடு, விஜய்யிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் உதவி செய்யாமல் ஏமாற்றிவிட்டார் என வீரலட்சுமி குற்றம்சாட்டியுள்ளார்.
தன்னுடைய தீவிர ரசிகை உயிர் இழப்பிற்கு காரணமான நடிகர் விஜய் என தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். இந்தச் சிறுமி விஜயகாந்துக்கோ, அஜித்துக்கோ ரசிகையாக இருந்து, அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தால் இன்றைக்கு அந்தச் சிறுமி உயிரோடு இருந்திருப்பாள் என வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வீரலட்சுமி கூறுகையில், "திருவள்ளூர் மாவட்டம் மோவூர் கிராமத்தில் சௌமியா என்கின்ற 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்ச்சி தாக்குதலுக்கு உண்டாகி அவமானத்தினால் தீக்குளித்தார். சௌமியா ஏழ்மையான குடும்பம் என்பதனால் நடிகர் விஜyயின் தீவிர ரசிகையான சௌமியா நடிகர் விஜய்க்கு பலத்து தீக்காயத்துடன் விஜய் அண்ணா என்னை வந்து நேரில் பாருங்கள் எனக்கு மருத்துவ உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்தச் செய்தி அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் சமூக வலைதளங்களில் செய்தியாக வைரலாக பரவியது. இச்செய்தியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கேள்விப்பட்டு அவருடைய ஒரு மாத சம்பளத்தை மருத்துவ செலவிற்காக கொடுத்தார். அதேபோன்று திருவள்ளூர் தாசில்தார் அவர்களும் மருத்துவ செலவிற்காக அவருடைய ஒரு மாத சம்பளத்தை வழங்கினார். தமிழ்நாடு அரசும் மூன்று லட்சம் பணம் வழங்கியது.
இதில் தமிழ்நாட்டு மக்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட சிறுமி கோரிக்கை விடுத்தது நடிகர் விஜய்க்கு. ஆனால் உதவியது தமிழ்நாடு அரசு. இதை நடிகர் விஜய் உப்பு போட்டு சோறு தின்னு இருந்தால் நடிகர் விஜய் அவர்களின் ரசிகைக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு உதவி செய்தது என்று தமிழ்நாடு அரசிடம் நன்றி கூறி இருந்திருப்பார். நன்றி நினைத்து இருப்பார். ஆனால் நடிகர் விஜய் அவ்வாறு செய்யவில்லை.
மாறாக தமிழ்நாடு அரசை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களையும் நக்கல் நையாண்டி செய்கின்றார். தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் சிந்திக்க வேண்டும் உங்களுக்கு உதவுவது விஜய் அல்ல, தமிழ்நாடு அரசு நடிகர் விஜய் உங்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய வந்திருக்கிறார்.
இறந்து போன சௌமியாவுக்காக நாங்கள் தமிழக வெற்றி கழகத்திடம் நீதி கேட்டு நடிகர் விஜய்யின் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தை முற்றுகையிட அறிவிப்பு செய்து இருக்கிறோம். தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் நாட்டு மக்களும் எங்கள் பக்கம் தான் நிற்க வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொள்கின்றோம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications