வீரமணி புயலில் யார் அந்த கருப்பு ஆடு? ஸ்டாலினுக்கு மட்டும் இது தெரிஞ்சிருந்தா விட்டிருக்கவே மாட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை, அன்று திமுக எப்படிக் காரசாரமான அரசியல் பிரச்சாரத்தைக் கையில் எடுத்ததோ, அதேபோல திமுக ஆட்சியில் நடந்துள்ள ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தை இப்போது தவெக கையிலெடுத்துள்ளது.. திமுகவுக்கு எதிராக, இடைத்தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தையும் துவங்கியிருக்கிறது" என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்

பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி , "50000 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்திருக்கும் முன்னணி தொழிலதிபர் வீரமணி.. 40, 45 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்.. பல அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவியும் செய்திருக்கிறார்.. இப்படிப்பட்டவர் குழந்தைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

Veeramani controversy Stalin controversy TVK

தொழிலதிபர் வீரமணி

ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி விவகாரத்தில், இப்போது இந்த விஷயத்தில், இந்த அளவுக்கு வெளிவந்ததே பெரிய விஷயம். 2 வருடங்களுக்கு முன்பே இதனை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால், இந்த வழக்கை மூட காவல்துறை சமர்ப்பித்த குளோஷர் ரிப்போர்ட்டை ஏற்றுக்கொள்ள மறுத்த பெண் நீதிபதியின் நேர்மையான நடவடிக்கையால்தான் இந்த வழக்கு இன்றைக்கு உயிர்ப்புடன் வெளியே வந்திருக்கிறது.

சம்பவம் நடந்தபோது சிறுமியாக இருந்து தற்போது மேஜராக மாறியுள்ள ஒரு பெண்ணின் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பெறப்பட்டுள்ளது.. இந்த வழக்கில் பலிகடாவாக்கப்பட்ட மற்ற 9 சிறுமிகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளதால், இது காவல்துறையினருக்கு மிகவும் வலுவான வழக்காக மாறியுள்ளது

ரஞ்சித் குமார் ஆதாரங்கள்

ஆனால் "நாங்கள் குளோஷர் ரிப்போர்ட் தாக்கல் செய்யவில்லை" என திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மற்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆகியோர் சொல்வது பொய்.. அப்படியென்றால் கோர்ட் நிராகரித்த அந்த "Further Action Dropped (FAD)" அறிக்கை எது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்..

2 வருடங்களுக்கு முன்பேயே இந்த பாலியல் அத்துமீறல் விவகாரம் தொடர்பான தகவல்களைச் சென்னை மாநகர காவல் துறைக்கு தெரிவித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் எஸ்சி/எஸ்டி பிரிவுத் தலைவர் ரஞ்சித் குமார் சொல்கிறார். சிறுமிகள் மீது நடத்திய பாலியல் வன்புணர்வு குறித்த வீடியோ ஆதாரங்களையும் அன்றைய சென்னை காவல் ஆணையருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாகவும் சொல்கிறார்.

இந்த ஆதாரங்களை பெற்ற அன்றைய காவல் ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர் ஆகியோர் விசாரணை நடத்துவதாக உறுதி அளித்த போதிலும், விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் விசாரணைக்கு பின் மெல்ல மெல்ல சென்னை மாநகர காவல்துறை இதில் ஆர்வம் காட்டுவதைக் குறைத்துக் கொண்டு வழக்கை மூட முயன்றதாக ரஞ்சித் குமாரே சொல்கிறார். இவ்வளவு நடந்திருக்கும்போது, இது ஏன் அன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லை?

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த விவகாரம் பற்றி முன்னரே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அப்படி அவருக்குத் தெரிந்திருந்தால் கண்டிப்பாக இதை அனுமதித்திருக்க மாட்டார்.. காரணம், ஸ்டாலின் மிசச்சிறந்த அரசியல்வாதி.. இதுபோன்ற விஷயங்கள் கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால் அன்றே இதன்மீது ஆக்‌ஷன் எடுத்திருப்பார்.. அதேசமயம் இது தெரியாமல் நடந்திருக்கிறது என்றால் அது அபத்தமானது.. ஆட்சி நிர்வாகத்தில் நடந்த மிகப்பெரிய கோட்டை விடுதல் ஆகும்..

இதில் திமுக நிர்வாகிகள் பேசுவது மேலும் மேலும் சிக்கலை பெரிதாக்குகிறது.. ஆர்.எஸ். பாரதி, ரகுபதி போன்ற திமுக தலைவர்களை மீடியாவில் பேச விடாமல் ஓய்வெடுக்க வைக்க வேண்டும்.. அவர்கள் பேசுவது திமுக கட்சிக்கு லட்சக்கணக்கான வாக்குகளை இழக்க செய்யும்.

இன்னைக்கு தேவையில்லாமல் ஸ்டாலினுக்குதான் கெட்ட பெயர்.. நிர்வாகத்திலிருந்த யாரோ சில கருப்பு ஆடுகள் இப்படியான கேவலமான காரியத்தை செய்திருக்கிறது..

தவெக பிரச்சாரம்

இதை செய்தது திமுக என்று சொல்லவில்லை, ஆனால் ஆட்சியின்போது இதை ஏன் தண்டிக்கவில்லை? ஏன் மூடி மறைக்க முயன்றது என்பதற்குதான், திமுக பதில் சொல்ல வேண்டி வரும்.. நாட்டின் முக்கிய தொழிலதிபர் ஒருவர் சம்பந்தப்பட்ட இவ்வளவு பெரிய கொடூரமான குற்றச்சாட்டையும், அதை மூடி மறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் உளவுத்துறையோ அல்லது காவல்துறையோ அன்றைய முதலமைச்சரின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை ?

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை அன்று திமுக எப்படி காரசாரமான அரசியல் பிரச்சாரத்தைக் கையில் எடுத்ததோ, அதேபோலத் திமுக ஆட்சியில் நடந்துள்ள இச்சம்பவத்தைக் தவெக கையிலெடுத்துள்ளது.. திமுகவுக்கு எதிராக, இடைத்தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தை துவங்கியிருக்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+