வீரமணி பென்டிரைவில் அந்த வீடியோ.. சாட்டையை சுழட்டிய அமல்ராஜ்! இதுல ரஜினியை ஏன் இழுக்கணும்: அந்தணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீரமணி விவகாரத்தில், ரஜினி ஏன் பேசவில்லை என்று சிலர் கேட்பது தேவையில்லாதது.. ரஜினி அரசியல்வாதி கிடையாது.. அவர் பாட்டுக்கு சினிமாவில் நடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார். எனவே ரஜினியைக் குறை சொல்வது எதுக்கு? ரஜினியை எதுக்கு திட்டி தீர்க்கிறீர்கள், அவருக்கு எப்படி வீரமணியின் இன்னொரு பக்கம் தெரியும்.. ரஜினி உட்பட எந்த அரசியல்வாதியையும் இந்த விஷயத்தில் உள்ளே கொண்டு வர வேண்டாம்.. நியாயமான முறையில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது" என்று மூத்த சினிமா விமர்சகர் அந்தணன் கேள்வி தெரிவித்துள்ளார்.

Valai Pechu Anthanan சேனலில் பேசியிருக்கும் அந்தணன், "இதிகாசங்களிலும் புராணங்களிலும் கம்சனை அழிப்பதற்காக கிருஷ்ணர் பிறந்தார் என்று சொல்வார்கள். அதேபோல, ஜெம் கிரானைட்ஸ் வீரமணியை வீழ்த்துவதற்காகவே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வந்துள்ளார் என்று சொல்லலாம்.

Veeramani

வீரமணி அக்கிரமம்

ஒருவேளை விஜய்யின் அரசியல் வருகை இங்கு நிகழாமல் போயிருந்தால், இந்த வீரமணி என்பவர் சாகும் வரைக்கும் தன் அக்கிரமங்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்திருப்பார். வீரமணியைத் தண்டிப்பதற்காகவே தவெக ஆட்சியைப் பிடிக்கப் போகிறதோ என்று தோன்றும் அளவுக்குச் சூழல் மாறியுள்ளது.

காலங்காலமாக பணபலம் மிக்கவர்கள் அதிகார பலத்தையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களும் இவர்களிடம் சலுகைகளை எதிர்பார்ப்பது தொடர்கிறது. சரியான ஆட்சியும் நேர்மையான அதிகாரிகளும் அமரும்போது இதுபோன்ற குற்றவாளிகள் தண்டித்தே ஆக வேண்டிய சூழல் உருவாகிறது.

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி

ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் சொத்து மதிப்பைப் பார்த்தால் தமிழ்நாட்டிற்கே ஒரு பட்ஜெட் போடலாம். 50-60 ஆண்டுகளாக சாம்ராஜ்யம் நடத்தி பல மலைகளைக் கரைத்து ஏற்றுமதி செய்தவர் அவர். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டு தவறு செய்வதைக் கூட விட்டுவிடலாம், ஆனால் ஏழை எளிய பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி அப்பாவிகளைச் சூறையாடியது கேடுகெட்ட அயோக்கியத்தனம். வெளியிலும் மேடைகளிலும் யோக்கியர் போலப் பேசும் பலரின் பின்னணியில் இவ்வளவு கேவலங்கள் மறைந்துள்ளன.

கடந்த திமுக ஆட்சியில் வீரமணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தவெகவை மட்டுமே கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூட, திமுக ஆட்சியில் வீரமணி தப்பவிக்கப்பட்டார் என்று ஒப்புக்கொண்டு பேசியுள்ளார்.

அமல்ராஜ் எடுத்த அதிரடி

கடந்த அக்டோபர் 6ம் தேதி ஒரு சமூக சேவகர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு பென்டிரைவை ஆதாரமாக கொடுத்தார். அதில் வீரமணியின் சட்டவிரோதச் செயல்கள் அடங்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ ஆதாரங்கள் இருந்தன. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் தொடங்கியது. ஆனால், 70 கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டு, "வீடியோவில் இருப்பது யார் என தெரியவில்லை, சிசிடிவி ஆதாரங்கள் இல்லை" எனக் சொல்லி வழக்கையே மூடப் பார்த்தார்கள்.

இந்த விவகாரம் ஆணையர் அமல்ராஜ் மூலம் முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றபோது, அவர் கடும் கோபமடைந்தார். "சம்பந்தப்பட்ட ஒருத்தரையும் விடாதீர்கள், தினமும் எனக்கு விசாரணை நிலவரத்தைப் பற்றி அப்டேட் தர வேண்டும்" என அதிரடி உத்தரவிட்டார். வழக்கை மூட முயன்ற உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோருக்கு இப்போது சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

"ரஜினி ஏன் பேசவில்லை?"

சமூகப் பிரச்சனைகளில் எப்போதும் குரல் கொடுக்கும் கமல்ஹாசன் தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். ஆனால், "ரஜினி ஏன் பேசவில்லை?" எனக் கேள்விகள் எழுப்புவது நியாயமற்றது.

ரஜினி அரசியல்வாதி கிடையாது.. அவர் பாட்டுக்கு சினிமாவில் நடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார். சீமான் அல்லது திமுக பிரமுகர்களைக் கேள்வி கேட்பதில் அர்த்தமுள்ளது, ஆனால் ரஜினியைக் குறை சொல்வது தேவையில்லாதது... ரஜினிக்கும் வீரமணிக்கும் தொழில் ரீதியாகவோ நட்பு ரீதியாகவோ பழக்கம் இருந்திருக்கலாம். ஒருவர் எவ்வளவு பெரிய தொழிலதிபர் என்ற பிம்பத்தைப் பார்த்துத்தான் பலர் பழகுவார்கள்.. அவர்களின் கேவலமான இன்னொரு பக்கம் தெரியும்போதுதான் அதிர்ச்சியே ஏற்படும்.

சாட்டையைக் கையில் எடுக்கும் நீதிபதிகள்

தவெக நண்பர்கள் இதில் வேறு எந்தவிதமான அரசியலையும் கொண்டு வர வேண்டாம். வழக்குகள் கோர்ட்டுக்கு சென்றால் முடிவடைவதற்கு 15 முதல் 20 ஆண்டுகள் ஆகிவிடுகிறது. எந்த ஆட்சி வந்தாலும் நம்மைக் காப்பாற்றிவிடும் அல்லது வழக்கு நீண்டகாலம் இழுத்தடிக்கும் என்கிற திமிரில்தான் இதுபோன்ற நபர்கள் தவறு செய்கிறார்கள்.

"நாங்கள் சாட்டையைக் கையில் எடுத்தால் அடிக்காமல் வைக்க மாட்டோம்" என்று ஒவ்வொரு நீதிபதியும் நினைத்து, இந்த விவகாரத்தில் விரைந்து நீதியை வழங்க வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+