கம்யூனிஸ்ட் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்பு.. திமுகவுடன் கொள்கை உறவு உள்ளது! வீரபாண்டியன் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லண்ணுவின் சிலை திறப்பு விழாவில், உதயநிதி ஸ்டாலினும் - வீரபாண்டியனும் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய வீரபாண்டியன், திமுகவுக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் கொள்கை ரீதியில் உறவு உள்ளது என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லண்ணுவின் சிலை திறப்பு விழா சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியனும் ஒன்றாக பங்கேற்றனர்.

Veerapandian and Udhayanidhi Stalin participate together in a Communist event in Chennai

தவெக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரக்கூடிய நிலையில் உதயநிதி ஸ்டாலினும் - வீரபாண்டியனும் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய வீரபாண்டியன், திமுகவுக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் கொள்கை ரீதியில் உறவு உள்ளது என்றார்.

இது குறித்து வீரபாண்டியன் கூறியதாவது:- திமுகவுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் நீண்ட நெடுங்கால நெருங்கிய கொள்கை உறவு உள்ளது. எங்களின் எதிரி ஆர்.எஸ்.எஸ், பாஜக தான். சமரசம் செய்யாமல் அரசியலில் எதிர்க்கிறோம். அரசியலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நிலைப்பாடுகள் மாறுபடலாம். திமுக, அதிமுக, தவெக போன்ற இயக்கங்களை ஜனநாயக இயக்கங்களாகவே நாங்கள் பார்க்கிறோம். சட்டத்தின் ஆட்சி முறையை பாஜக நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+