Personality test: உங்களுக்கு எந்த காய் பிடிக்கும்னு சொல்லுங்கள்! நீங்கள் யார்னு நாங்க சொல்றோம்!
சென்னை: நமது அன்றாடத் தேர்வுகள் நம்மைப் பற்றி பல ரகசியங்களைச் சொல்லும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உண்ணும் உணவு முதல், நீங்கள் உடுத்தும் உடை வரை ஒவ்வொன்றும் உங்கள் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த 'காய்கறி ஆளுமைத் தேர்வு' (Vegetable Personality Test), உங்கள் ஆழ்மனதின் வலிமையையும், உங்கள் தனித்துவமான பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.
ஆளுமைத் தேர்வுகள் என்பது, நம்மைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற உதவும் சுவாரஸ்யமான மற்றும் தகவல் நிறைந்த வழிமுறைகளாகும். நாம் பொதுவாகக் கருத்தில் கொள்ளாத நம் பழக்கவழக்கங்கள், விருப்பங்கள் மற்றும் பிற ஆளுமை அம்சங்களை இந்தத் தேர்வுகள் நமக்குக் காட்டுகின்றன. செடிகளைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து பிடித்தமான வண்ணங்கள் வரை, இந்த ஆய்வுகள் உங்கள் நடத்தைகள் மற்றும் நீங்கள் யார் என்பதை வரையறுக்கும் அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

சில ஆளுமைத் தேர்வுகள் உங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களையும், சிக்கலான சூழ்நிலைகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதையும் வெளிப்படுத்தும். அந்த வகையில், ஒரு காய்கறியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களை நீங்களே வெளிப்படுத்த ஒரு வேடிக்கையான வழியாக இந்த 'காய்கறி ஆளுமைத்' தேர்வு அமைகிறது. உங்கள் தேர்வு, உங்களின் உள்ளார்ந்த பலம் மற்றும் தனித்துவமான பண்புகளை அப்பட்டமாகக் காட்டிவிடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மூன்று காய்கறிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு விரைவான பயிற்சி; நீங்கள் முதலில் பார்க்கும் காய்கறியை உங்கள் உள்ளார்ந்த பலத்துடன் தொடர்புபடுத்துங்கள். இதன் மூலம், உங்கள் மறைந்திருக்கும் சக்தியை வரையறுக்க பல வழிகள் உள்ளன என்பதைக் கண்டறியலாம்.
1. காலிஃபிளவர்:
நீங்க காலிபிளவரைத் தேர்வு செஞ்சிருக்கீங்களா? அப்போ நீங்க ஒரு 'மிஸ்டர் கூல்' ரகம்! எதையும் நிதானமா யோசிச்சுதான் செய்வீங்க. சுத்தி இருக்கிறவங்க எல்லாம் பதற்றத்துல ஓடிட்டு இருந்தாலும், நீங்க மட்டும் "ரிலாக்ஸ் பாஸ்!"னு சொல்லிக்கிட்டு அசால்ட்டா இருப்பீங்க. நீங்க ரொம்பவே மென்மையானவங்க, ஆனா தெளிவானவங்க. உங்களை நம்பி எந்தப் பொறுப்பையும் தைரியமா ஒப்படைக்கலாம்!
2. உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு பிரியரா நீங்க? அப்போ நீங்க ஒரு 'ஆல்-ரவுண்டர்'! உருளைக்கிழங்கு எப்படி எல்லா காய்கறியோடவும் மிக்ஸ் ஆகுமோ, அதேமாதிரி நீங்களும் எந்தச் சூழலுக்கும் ஏத்த மாதிரி டக்குனு செட் ஆகிடுவீங்க. "எங்க விட்டாலும் பிழைச்சுக்குவான்"னு சொல்லுவாங்களே, அது உங்களைப் பத்திதான்! நீங்க ரொம்ப பிராக்டிகலான ஆளு. எந்தப் பிரச்சனை வந்தாலும் அதுக்கு ஒரு 'மாஸ்' ஐடியா வெச்சிருப்பீங்க.
உங்களை எங்கு விட்டாலும் பிழைத்துக் கொள்வீர்கள். நீங்கள் நம்பகமானவர் மற்றும் விடாமுயற்சி கொண்டவர். ஒரு முறையான வாழ்க்கையை விரும்பினாலும், எதிர்பாராத மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்வீர்கள். சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதில் நீங்கள் சிறந்தவர் என்பதால், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் உங்கள் உதவியை நாடுவார்கள்.
3. குடைமிளகாய்:
குடைமிளகாய் உங்கள் தேர்வாக இருந்தால், உங்கள் மனநிலை எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கையை ஒரு சாகசமாகப் பார்ப்பவர் நீங்கள். புதிய விஷயங்களைக் கண்டறிவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம். சவால்களைக் கண்டு அஞ்சாமல், அதை ஒரு வாய்ப்பாகக் கருதி முன்னேறுவீர்கள். உங்கள் நேர்மறையான எண்ணங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஊக்கமளிக்கும். தடைகளை விட புதிய வாய்ப்புகளையே உங்கள் கண்கள் தேடும்.
உங்ககிட்ட எப்போதும் 'எனர்ஜி' குறையவே குறையாது! வாழ்க்கையை ஒரு சாகசமா பார்க்குற ஆளு நீங்க. புதுசு புதுசா எதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும்னு நினைப்பீங்க. மத்தவங்க கஷ்டமா பார்க்குற விஷயத்தை நீங்க ஒரு வாய்ப்பா பார்ப்பீங்க. உங்ககூட இருந்தாலே மத்தவங்களுக்கு ஒரு பாசிட்டிவ் வைப் (Positive Vibe) கிடைச்சிடும். நீங்கதான் அந்த குரூப்போட 'உற்சாக டானிக்'!












Click it and Unblock the Notifications