தக்காளி, கத்தரிக்காய் கிலோ ரூ 100.. முருங்கைக்காய் ரூ 270-க்கு விற்பனை.. இல்லத்தரசிகள் கவலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கைக்காய் விலை கிலோ ரூ 330 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ 270 க்கு விற்பனையாகிறது.

Recommended Video

    சென்னை: மீண்டும் உயர்ந்த தக்காளி விலை: கன்னத்தில் கைவைக்கும் இல்லத்தரசிகள்!

    தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு மற்றும் வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தம் காரணமாக தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக ரூ 150 வரை விற்கப்பட்டு வந்தது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலை ரூ 100 முதல் 130 வரையும் சில்லறை விலை ரூ 130 முதல் 150 வரையும் விற்கப்பட்டு வந்த நிலையில் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    தக்காளி விலை

    தக்காளி விலை

    தக்காளியின் விலையை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன. மேலும் காய்கறிகளின் விலையும் அதிகரித்தது. இதையடுத்து பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளி ரூ 90-க்கு விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது. இதையடுத்து பொதுமக்களும் அதிகாலையிலேயே குவிந்து தக்காளிகளை வாங்கி வந்தனர்.

    கோயம்பேடு

    கோயம்பேடு

    இந்த விலையேற்றம் குறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் கூறுகையில் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து தக்காளியின் விலை கிலோ ரூ 80 ஆக குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் தக்காளி விலை நேற்று முதல் அதிகரித்துள்ளது.

    தேனி

    தேனி

    தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் ,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வருகின்றன. கடந்த சில நாட்களாக அந்த பகுதிகளில் மழை பெய்து வருவதால் வரத்து குறைந்து காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    முருங்கை விலை

    முருங்கை விலை

    இதனால் சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ 110 ஐ தொட்டது. அதே போல் கத்தரிக்காய் விலையும் ரூ 100 முதல் ரூ 110க்கு விற்பனையாகிறது. மழையால் முருங்கைக்காயின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் விலை நேற்றைய தினம் ரூ 330 க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் முருங்கைக்காய் விலை ரூ 270க்கு விற்கப்படுகிறது. தக்காளியின் விலை ரூ 100 க்கு விற்பனையாகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகளை வைத்து சமைக்கத் தொடங்கிவிட்டனர். இன்னும் சிலர் இறைச்சி உணவுகளை சமைத்து வருகிறார்கள்.

    கோயம்பேட்டில் இன்றைய காய்கறிகளின் விலை

    மகாராஷ்டிர முருங்கைக்காய் கிலோ ரூ 270 - 300 வரை
    குஜராத் முருங்கை கிலோ ரூ 160 முதல் 180 வரை
    உஜாலா கத்தரிக்காய் 1 கிலோ ரூ 90
    நாட்டுத் தக்காளி கிலோ 95 முதல் ரூ 110
    வெங்காயம் கிலோ 30
    வெண்டைக்காய் கிலோ ரூ 60
    கேரட் கிலோ 70 ரூபாய்
    அவரைக்காய் கிலோ 90 ரூபாய்
    கோவைக்காய் கிலோ 60 ரூபாய்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+