முனுமுனுக்க வைக்குதே முருங்கை..1ஆம் தேதி வரைக்கும் தாங்குமா? பாக்கெட்டை பதம் பார்க்கும் காய்கறிகள்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட், பெரிய வெங்காயம், பீன்ஸ் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கும், முருங்கக்காய் 200 ரூபாய்க்கும் விற்பனையாவது இல்லத்தரசிகளை கவலை அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது மழையோடு, கடுமையான பனிப் பொழிவுடன் காணப்படுகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகள் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பனி மற்றும் மழைக் காலங்களில் ஈரப்பதம் காரணமாக வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கணிசமாக அதிகரிக்கும். மேலும், சபரிமலை ஐயப்பன் சீசன் முடிந்து, தைப்பூசம் சீசன் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் பாதயார்த்திரை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
இதனால் இந்த காலங்களில் இறைச்சி விலை வெகுவாக குறையும் அதே நேரத்தில் காய்கறிகளின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 260 முதல் 250 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் தற்போது 220 ரூபாயாக குறைந்து இருக்கிறது. ஆட்டு இறைச்சி விலை 800 ரூபாயாகவும், மீன்களின் விலை 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. அதே நேரத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தற்போது வரத்து குறைவோடு. பனிப் பொழிவு மற்றும் பக்தர்கள் விரதம் கடைபிடிக்கும் காலம் என்பதால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. குறிப்பாக பீன்ஸ், கத்தரிக்காய், கேரட், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றின் விலை மிகக் கடுமையாக உயர்ந்திருக்கிறது.
தற்போதைய சூழலில் ஒரு கிலோ பீன்ஸ் 90 ரூபாய்க்கும், பீட்ரூட் 80 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 80 ரூபாய்க்கும் முட்டைக்கோஸ் 65 ரூபாய்க்கும், கேரட் 80 ரூபாய்க்கும், இஞ்சி 100 ரூபாய்க்கும், மிளகாய் ₹80க்கும், தக்காளி 35 ரூபாய்க்கும், அதிகபட்சமாக பெரிய வெங்காயம் 105 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோ பூண்டு 400 ரூபாய்க்கு அதிகபட்சமாக விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. சில வாரங்களாக உருளைக்கிழங்கு விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இந்த வாரம் 74 ரூபாய்க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட விலைகள் அனைத்தும் கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை விலை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு கிலோ கணக்கில் காய்கறிகளை மொத்த விலையில் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் சில்லறை விற்பனை விலையில் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வைத்து விற்கின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை ₹100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
இதே போல பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆப்பிள் 250 ரூபாய்க்கும், வாழைப்பழம் 130 ரூபாய்க்கும், பெரிய நெல்லிக்காய் 100 ரூபாய்க்கும், கொய்யா 110 ரூபாய்க்கும், திராட்சை 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications