பழைய கார்களை வாங்குறீங்களா? உஷார் மக்களே! மத்திய அரசு போட்ட முக்கிய உத்தரவு
சென்னை: விரைவில் பல நகரங்களில் காற்று மாசை கட்டுப்படுத்த மின்சார வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், பழைய பெட்ரோல், டீசல் கார்களை உரிமையாளர்கள் விற்க தொடங்கியிருக்கின்றனர். மறுபுறம் பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது.
காற்று மாசு சர்வதேச பிரச்சனை. இந்தியாவை பொறுத்த வரை டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. எனவே, காற்று மாசு தவிர்க்க மின்சார வாகனங்களை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் டெல்லியில் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதாவது 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்கப்பட்டது. இதனால் பழைய வாகனங்களை அடிமாட்டு விலைக்கு விற்க உரிமையாளர்கள் முன்வந்தனர். சொகுசு கார்கள் மிக குறைந்த விலைக்கு விறக்கப்பட்டன. டெல்லியில் மட்டும்தான் இந்த கட்டுப்பாடுகள் என்பதால், மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் டெல்லி கார்களை வாக்க ஆர்வம் காட்டினர்.
இப்படி இருக்கையில் 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. பொதுமக்கள் பழைய வாகனங்களை பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் அதன் வயதை பொறுத்து தகுதி சான்றிதழ் கட்டணம் வசூலிக்கப்படும். 10-15 ஆண்டுகள், 15-20 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேல் என 3 பிரிவுகளாக வாகனங்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பழைய வாகனங்களுகுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3,500லிருந்து ரூ.25,000 ஆகவும், நடுத்தர வாகனங்களுக்கான கட்டணம் ரூ.20,000 ஆகவும், கார் போன்ற வாகனங்களுக்கான கட்டணம் ரூ.10,000லிருந்து ரூ.15,000 ஆகவும் பைக்குகளுக்கு ரூ.600லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே பழைய வாகனங்களை வாங்குவோர் யோசித்து வாங்க வேண்டும்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications