பழைய பைக்குகள் டூ கார்கள்..எகிறியது வாகன வரிகள்.. "ரெடியா இருங்க".. விரைவில் வருகிறது அரசு அறிவிப்பு
சென்னை: திட்டமிட்டபடியே, வாகனங்களுக்கான வரி உயர்வு, 1-ம்தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இதுகுறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், 'கேப்'கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கு புதிய வரியை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள்: அதாவது, வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது.
சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயா்த்தப்படுகிறது.
பழைய பைக்குகள்: புதிய பைக்குகளுக்கான வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், பழைய பைக்குகளுக்கு, ஒருவருட பழையதெனில் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சதவீதமும், அதற்கு மேல் 10.25 சதவீதமும், 2 ஆண்டு வரை பழைமையானதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய இரு சக்கர வாகனங்களில் ரூ.5 லட்சம் வரை விலை இருந்தால் 12 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருந்தால் 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.ரூ.20 லட்சம் வரை 18 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால் 20 சதவீதம் என வாழ்நாள் வரி விதிக்கப்படுகிறது. இந்த 4 விதமான விலை அடிப்படையில், ஒருவருடம் முதல் 11 வருடங்களுக்கு மேல் இயங்கும் பைக்குகளுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 முதல் 18.75 சதவீதம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பசுமை வரி: இதுதவிர, 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டாா் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு பிறகு, மறுநாளே அமைச்சர் சிவசங்கர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "இப்போது தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள வரி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தைக் காட்டிலும் குறைவுதான்.. எனினும், கர்நாடகாவில் வாகன வரி குறைவாக உள்ளதாக கூறப்பட்டது.. எனவே அதில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால், நிச்சயம் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி தந்திருந்தார்.
விலைஉயர்வு: எனினும், இந்த வாகன வரி உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவதுடன், விலை உயர்வை திரும்ப பெறவும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், வாகன வரி உயர்வில் மாற்றம் இருக்காது என்றும், அறிவித்தபடியே வருகிற 1ம் தேதி முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, புதிய வரி விதிப்புகள் குறித்த உத்தரவுகள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு இன்னும் அனுப்பப்படவில்லையாம்.. எனினும், நவம்பா் 1-ந்தேதி முதல், தயாா் நிலையில் இருக்கும்படி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தலை அரசு தெரிவித்திருக்கிறதாம்..
விரைவில் அறிவிப்பு: எனவே, புதிய வரி கட்டண உயா்வு நடைமுறைகள், நவம்பா் 1 முதல் அமல்படுத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது.. அத்துடன், இதற்கான உத்தரவுகளுடன், புதிய கட்டணங்களுக்கான பட்டியலும், இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications