முருகன் கையில் ஏன் கூரிய வேல்.. எஸ்எஸ்ஆர் பேசும் சூப்பர் வசனம்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: 'உருவமற்ற அறிவுக்கு தமிழன் போட்டுக்காட்டிய கார்ட்டூன் தான் வேல்' என்று நடிகர் எஸ்எஸ்ஆர் பேசும் பழைய பட காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாரதா என்ற பழைய படத்தில் நடிகர் எஸ்எஸ்ஆர் (எஸ்எஸ் ராஜேந்திரன்) கல்லூரி பேராசிரியராக நடித்திருப்பார். இந்த படத்தை கேஎஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கி 1962ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் எஸ்எஸ்ஆர் வகுப்பறையில் பாடம் நடத்திவிட்டு, கேட்பார். அப்போது ஒரு மாணவி (விஜயகுமாரி) சந்தேகம் என்பார்.
அப்போது எஸ்எஸ்ஆர், என்னிடம் சந்தேகம் கேட்பது ரொம்ப பிடிக்கும். எத்தனை சந்தேகங்கள் வேண்டுமானாலும் கேட்கலாம். வாமா இப்படி கேளுமா என்கிறார்.
அதற்க மாணவியாக வரும் நடிகை விஜயகுமாரி, வேறு ஒன்றும் இல்லை சார், தாய்மை உணர்ச்சி புராணத்தில் இருப்பதாக சொன்னீர்களே அதில் தான் எனக்கு சந்தேகம் என்பார்

வெற்றி வேல், வீர வேல்
அதற்கு எஸ்எஸ்ஆர், என்ன சந்தேகம் என்று கேட்பார். அப்போது அந்த மாணவி (விஜயகுமாரி), முருகன் கையில் வேலாயுதம் இருக்கிறது அல்லவா, அந்த வேலாயுதத்துக்கு பெயர் என்ன என்பார். அதற்கு எஸ்எஸ்ஆர் ராஜேந்திரன் , வெற்றி வேல், வீர வேல், ஞான வேல் என்று பக்தர்கள் அவரவர் மனோபாவத்திற்கு தகுந்தாற் போல் மாற்றி வைத்திருப்பார்கள் என்பார்.

பார்வதி கொடுத்த வேல்
அப்போது மாணவியாக வரும் நடிகை விஜயகுமாரி வேலாயுதத்தை முருகனிடம் கொடுத்தது யார் என்பார். அதற்கு எஸ்எஸ்ஆர், பார்வதி கொடுத்ததாக புராணம் சொல்கிறது என்பார். அப்போது விஜயகுமாரி, பார்வதி முருகனுக்கு தாய் தானுங்களே... எஸ்எஸ்ஆர்.. ஆமாம் என்பார்! அப்போது விஜயகுமாரி பேசும் போது, "சகிப்பு தன்மையும், பழிவாங்காத குணத்தையும் போதிக்கக்கூடிய குணம் தான் தாய்மை உணர்வு என்பார் அல்லவா.." அதற்கு எஸ்எஸ்ஆர்.. ம்ம்ம்.. சொல்லு என்பார். தொடர்ந்து விஜயகுமாரி பேசுகையில், "அப்படி இருக்கும் போது பழிவாங்கும் உணர்வை தூண்டக்கூடிய வேலாயுதத்தை கொடுத்த புராணத்தில் தாய்மை உணர்ச்சி இருக்கும் என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்" என்பார்.

பஞ்சம் லஞ்சம் கார்டூன்
அப்போது எஸ்எஸ்ஆர் கை தட்டி அருமையான கேள்வி, இப்படித்தான் கேள்வி கேட்கணும் என்பார். தொடர்ந்து எஸ்எஸ்ஆர் பேசும் போது, "சந்திர மண்டலத்திற்கு மனிதனை அனுப்பக்கூடிய விஞ்ஞானம் வளர்ந்திருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்தில் சாதாரணமாக பஞ்சம் லஞ்சம் என்று சொன்னால் புரியும் அல்லாவா? ஆனால் அந்த உருவமில்லாத பஞ்சத்தையும் லஞ்சத்தையும் விளக்குவதற்காக கார்டூன் போட்டுக்காட்டுக்கிறார்கள். அதாவது பயங்கரத்தை விளக்க இந்த காலத்தில் கேலிசித்திரம் போட்டுக் காட்டுகிறார்கள்.

வேல் என்பது தமிழனின் கார்ட்டூன்
ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்னாலே வாழ்ந்த தமிழன், அறிவுக்கு கார்ட்டூன் போட துவங்கி விட்டான். உருவமற்ற அறிவுக்கு கேலி சித்திரம் போட்டு விளக்கி காட்டிய ஒரே இனம் தமிழ் இனம். தமிழன் செய்த கற்பனையிலும் ஒரு திறமை இருக்கும், தெளிவு மிளிரும். எப்படி என்றால். ஒரு மனிதருக்கு அறிவு கூர்ந்து இருக்க வேண்டும். குறுகிய அறிவாக இருக்கக்கூடாது. அது அகன்று இருக்க வேண்டும். அகண்ட அறிவு மேலெழுந்த வாரியாக மிதக்கக்கூடாது அது ஆழ்ந்து இருக்க வேண்டும். இதோபார், அறிவு கூர்ந்து, அகன்று, ஆழ்ந்து இருக்கிறது.. இல்லையா? (வேல் படத்தை போர்டில் வரைந்து காட்டுவார்) 'உருமற்ற அறிவுக்கு தமிழன் போட்டுக்காட்டிய கார்ட்டூன் தான் வேல்'. அது ஆயுதமல்ல" இவ்வாறு கூறுவார். இந்த படக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications