இது மோசமான திட்டமிடல்.. வேளச்சேரி- கிண்டி மேம்பாலத்திற்கு எதிர்ப்பு.. மெட்ரோ ரயிலுக்கு பெரிய சிக்கல்
சென்னை: வேளச்சேரி, கிண்டி பகுதியில் உள்ள 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி - குருநானக் கல்லூரி சாலை பகுதியில் 3 கிமீ தூரத்திற்கு ரூ. 310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. ஆனால் இந்த சாலையில் மெட்ரோ ரயிலும் வரப்போகிறது. எனவே மெட்ரோ ரயில் பாதையுடன் சேர்த்து, மேம்பாலத்தையும் ஒன்றாக வடிவமைக்கலாம் என்றும், தனித்து இனி மெட்ரோ பாதை அமைத்தால், தரைக்கு அடியில் அமைக்க வேண்டியதிருக்கும் என்றும், அப்படி அமைத்தால் மிகப்பெரிய அளவில் செலவாகும் என்றும் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் மிக அசுர வேகத்தில் வளர்ந்த ஒரு ஊர் என்றால், ஏன் தமிழ்நாட்டிலேயே ஒரு ஊர் மிக அசுர வேகத்தில் வளர்ந்தது என்றால் அது வேளச்சேரி தான். வேளச்சேரி தான் சென்னையின் தகவல் தொழில்நுட்ப மையம் என்று சொல்லலாம். வேளச்சேரியை சுற்றித்தான் பல்வேறு ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன. வேளச்சேரியை தாண்டாமல் ஐடி நிறுவனங்களுக்குள் ஒரு பாதி சென்னை மக்கள் போகவே முடியாது.

இதன் காரணமாக கிண்டி முதல் வேளச்சேரி வரை உள்ள சாலை எப்போதுமே நெரிசலுடன் இருக்கும். குறிப்பாக பீனிக்ஸ் மால் தொடங்கி ஐநது பார்லாங் சாலை சந்திப்பு வரை மிக கடுமையான நெரிசல் இருக்கும். இந்த இடத்தில் மிகப்பெரிய மால் இருப்பதும், குருநானக் கல்லூரி, ஐடி நிறுவனங்கள் செல்லும் சாலையான தரமணி இணைப்பு சாலை ஆகியவை சந்திப்பது நெரிசலுக்கு காரணமாக உள்ளது. இதை எல்லாத்தையும் விட சாலை மிக குறுகிய அளவில் தான் இருக்கும். அதுதான் நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காரணத்தால், கிண்டி கவர்னர் மாளிகை அருகே சர்தார் பட்டேல் சாலையில் தொடங்கி, அதாவது வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பில் இருந்து குருநானக் கல்லூரி வரை 100 அடி சாலையில் முடியும் வகையில் புதிய மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்தது. இந்த பால பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இது இருவழி பாதை மேம்பாலமாக கட்டப்பட உள்ளது. 3 இடங்களில் வாகன ஓட்டிகள் பாலத்தில் ஏறுவதற்கும், கீழே இறங்குவதற்கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட உள்ளது. குருநானக் கல்லூரி சந்திப்பு மற்றும் 5 பர்லாங் சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
அதேநேரம் இந்த சாலையில் வாகன நெரிசலுக்காக பாலம் போடுவது சரியான யோசனையாக தெரிந்தாலும், இங்கு மேம்பாலம் அமைத்தால், எதிர்காலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க சிக்கல் ஏற்படும் என்கிறார்கள். அப்படியே அமைத்தாலும் பூமிக்கு அடியில் செல்லும் வகையில் சுரங்கப்பாதை மெட்ரோ தான் அமைக்க வேண்டியது வரும் என்றும் கூறப்படுகிறது.

இது பற்றி வம்சி சந்திரன் என்ற நெட்டிசன் வெளியிட்ட பதிவில் கூறுகையில், இது ஒரு மோசமான திட்டமிடல். தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி வழித்தடத்தில் ஒரு மெட்ரோ ரயில் பாதைக்கான திட்டம் முன்மொழியப்பட்டிருக்கிறது. அதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்கையில், அரசு 2-3 ஆண்டுகள் காத்திருந்து, இந்த மேம்பாலத்தை மெட்ரோ திட்டத்துடன் சேர்த்து கட்டியிருக்க வேண்டும். மாறாக, மேம்பாலத்தை இப்போதே கட்டி முடிப்பது, இந்த நெரிசலான சந்திப்பில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கு இடம் இல்லாமல் போகச் செய்துவிடும். இதனால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) அதிகச் செலவில் சுரங்கப் பாதையை (Underground Corridor) அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications