ஓர் ஆண்டில் ஒளிரும் வேளச்சேரி - ‘தி பெஸ்ட் ஸ்டாலின் ஆட்சி’ என்கிறார் நடிகர் மதன் பாப்
சென்னை: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சென்னையில் உள்ள பகுதிகள் எந்தளவுக்கு மின் தேவையில் தன்னிறைவு பெற்று வருகின்றன எனப் பெரிய பட்டியலே போடலாம். இதற்கு முன்பாக வில்லிவாக்கம், வளசரவாக்கம், கேகே நகர், ராயபுரம் இப்படிப் பல பகுதிகள் தன்னிறைவு பெற்றுள்ளதை முன்பே எழுதி இருக்கிறோம்.
அதன் தொடர்ச்சியாக, வழக்கமாக வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் வேளச்சேரி, இந்தமுறை வெள்ளப் பாதிப்பிற்குள்ளாகவே இல்லை. அத்தனை முன்னெச்சரிக்கைகளை எடுத்து மழைநீர் தேங்காத சென்னையாக மாற்றிக் காட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
இப்போது அந்தத்தொகுதி எப்படி இந்த ஆட்சியில் மின் தேவையில் தன்னிறைவு பெற்றுள்ளது எனப் பாக்கப் போகிறோம். இந்தத் தொகுதியில் மட்டும் 400க்கும் அதிகமான ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆகவே சென்னையைப் பொறுத்தளவில் ஐடி ஹப் ஆக இருந்துவருகிறது.

இவைத் தவிர இத்தொகுதியின் அடையாளம் ஃபீனிக்ஸ் மால். ஆசியாவிலேயே மிகப் பெரிய வணிக வளாகமாக இது விளங்கி வருகிறது. மேலும் சென்னையில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான ஏரி ஒன்று உள்ளது.
ஒரு காலத்தில் வயல்வெளியாகக் காட்சியளித்த இந்தக் கிராமம், இன்று வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள மாபெரும் நகரமாக மாறி இருக்கிறது. அதனால் எந்நேரமும் மின் தேவையை அதிக அளவில் எதிர்பார்த்து உள்ள பகுதியாகவும் இருக்கிறது.

இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுக கூட்டணிக்கட்சியான அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசன் மெளலான பணியாற்றிவருகிறார். கூட்டணிக்கட்சி தொகுதியாக இருந்தாலும், இத்தொகுதி முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள தொகுதியாகவே இருந்து வருகிறது. காரணம், ஒரு காலத்தில் இப்பகுதியில்தான் ஸ்டாலினின் வீடு அமைந்திருந்தது. ஆகவே அவரைப் பொறுத்தளவில் வேளச்சேரி ஸ்பெஷல்தான்.
இத்தொகுதி எப்படி மின் தேவையில் தன்னிறைவு பெற்றுள்ளது என்பது குறித்து மின்துறை ஊழியர் ஆர்.ஹரிதாஸ், "குறைந்தது 18 ஆயிரம் நுகர்வோர்களை என் கட்டுப்பாட்டைவைத்துப் பராமரித்து வருகிறேன். அதில் அதிகப்படியான வீட்டு இணைப்புகள்தான் உள்ளன. ஒரு டிரான்ஸ்ஃபார்மரை தினமும் பராமரிக்கக் குறைந்தது ஒரு மணிநேரம் பிடிக்கும். ஆயில் பரிசோதனை, அப்புறம் எர்த் சரியாக இருக்கிறதா, சிலிக்கா ஜெல், மின் கசிவுக்கான வாய்ப்புகள் உள்ளதா எனப் பல விஷயங்களைச் சோதிப்போம்.

ஒரு டிரான்ஸ்ஃபார்மரை தினமும் பராமரிக்கவில்லை என்றால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும். அப்படி தினமும் பராமரிப்பு முடிந்து மீண்டும் டிரான்ஸ்ஃபார்மரை இயக்க ஒரு மணிநேரத்திற்குக் கட்டாயம் ஆகவே செய்யும். ஆகவே பல மின் நுகர்வோர் அடிக்கடி பாதிக்கப்படுவது வாடிக்கையாக இருந்தது.
ஆகவே அந்தப் பழைய தொழில்நுட்பத்தை மாற்றவேண்டிய தேவை காலத்திற்கு ஏற்ப மின் துறைக்கு ஏற்பட்டது. இப்போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியேற்றபின் சென்னை முழுவதும் பல பகுதிகளில் இந்த டிரான்ஸ்ஃபார்மர் முறை அகற்றப்பட்டு, நவீன ஆர்.எம்.யு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எங்கள் தொகுதியிலும் இப்போது 16 ஆர்.எம்.யு கருவிகளை மற்றி அமைத்துள்ளோம். இதில் நான் முன்பு சொன்ன பழைய பராமரிப்பு பிரச்சினைகள் இருக்காது. அதேபோல என் பகுதியில் மட்டும் 20 மின் பெட்டிகளின் பில்லர்களை உயர்த்தி அமைத்துள்ளோம். இந்த மாற்றத்திற்குப் பின் மழை வெள்ளத்திலும் மின் தடை ஏற்படவில்லை. அடாத மழையிலும் அணையாமல் விளக்குகள் எரிந்தன என்றே சொல்ல வேண்டும்" என்கிறார்.
இதேபகுதியில் காய்கறிக் கடை நடத்தி வரும் ஒருவர், இந்த ஆர்.எம்.யு மாற்றத்திற்குப் பிறகு எங்கள் பகுதியில் மின்வெட்டே இல்லை. அதேபோல குறைந்த அழுத்த மின் பிரச்சினையும் இல்லை. இந்தச் சிறப்பான மாற்றத்தைச் செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்கிறார்.
இத்தொகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நடிகர் மதன் பாப் பல தகவல்களைப் பரிமாறிக் கொண்டார். அவர், "இந்த மழை வருவதற்கு முன்பே பல இடங்களில் வேலை செய்து கொண்டே இருந்தார்கள். அதன் பயனாக இந்த மழைக்கு மின் வெட்டே ஏற்படவில்லை. அதேபோல் மெட்ரோ வேலைகள் போது பிரச்சினை என்று ஒரு போன் செய்தால் போதும் உடனே வந்து சரி செய்துதந்தார்கள்.

இப்போது வரை எந்தப் பிரச்சினைகளிலும் தாமதமே ஏற்பட்டதில்லை. நாம் ஏதாவது பிரச்சினை என்று போன் செய்யும் போதே அதற்கான காரணத்தைச் சரியாகச் சொல்வார்கள் மின் ஊழியர்கள். இன்னும் 10 நிமிடத்தில் சரியாகிவிடும் என்பார்கள். அதேபோல் சரியாக மின்சாரம் வரும். மின் துறை ஊழியர்கள் மிக சூப்பராக வேலை செய்கிறார்கள். என்னைக் கேட்டால் தமிழ்நாடு அரசின் மின்சார வாரியம், அடையாறு பகுதியைப் பொறுத்தவரை 'தி பெஸ்ட்'. இதற்காக நான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்கிறார்.
இதே தொகுதிக்குள் வரும் திருவான்மியூர் பகுதிக்கு மின் உதவிப் பொறியாளராக வேலை செய்து வரும் கஜேந்திரன், " ஒரு வருடத்தில் 15 ஆர்.எம்.யு கருவிகளை மாற்றி இருக்கிறோம். அதேபோல மின் கம்பத்தின் வழியே வழங்கப்பட்ட மின் இணைப்பும் இப்போது தரைவழிக்கு மாற்றி வருகிறோம். 17 பில்லர்களை உயர்த்தி உள்ளோம். 4 டிரான்ஸ்ஃபார்மர்கள் மாற்றப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிகப்படியான இ.பி. பாக்ஸ்களை மாற்றி உள்ளோம்" என்கிறார்.

"இங்கே 13 பிரிவு அலுவலகமும் ஆறு துணைமின் நிலையங்களும் உள்ளன. எங்கள் கட்டுப்பாட்டில் மட்டும் மொத்தமாக 1 லட்சத்து 80 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. 36 ஆயிரம் வணிக நிறுவன மின் இணைப்புகள் உள்ளன. இதுவரை இத்தொகுதியில் 235 ஆர்.எம்.யு கருவிகளை புதியதாக அமைத்துள்ளோம். மேலும் 120 விநியோக மின்மாற்றிகளை புதியதாக அமைத்துள்ளோம்.
கோடைக்காலத்தில் மின் தேவை அதிகம் இருக்கும் என்பதால் முன்கூட்டியே துணைமின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்து முடித்துள்ளோம். இத்தனை முன் ஏற்பாடுகளும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தலின் படி செய்துள்ளோம். அவரே முன் நின்று இதனை மேற்பார்வையிட்டு முடித்துக் கொடுத்துள்ளார்" என்கிறார் மேல் அதிகாரி ஒருவர்.

"முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்தத் தொகுதிக்காக மற்றும் 120 டிரான்ஸ்ஃபார்மர்களை புதியதாக வழங்கி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக இங்கே 2 லட்சத்து 10 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. முன்பு இருந்த டிரான்ஸ்ஃபார்மர்களில் எல்லாம் அதிகப்படியான வயர்கள் வெளியே வரும். நிறையப் பீங்கான் மின் உபகரணங்கள் இருக்கும். பெரிய எடைக் கொண்டதாகவும் அளவில் பெரியதாகவும் இருக்கும். ஆனால், இப்போது மாற்றப்படும் டிரான்ஸ்ஃபார்மர்கள் அளவில் சிறியவை. எடை குறைவானவை. அதைத்தான் வாங்கி மாற்றி வருகிறோம்.
ஆகவே மின் தடை, மின்வெட்டு, மின் கசிவு என எந்தப் பிரச்சினையும் இல்லாத தொகுதியாக வேளச்சேரியை முதல்வர் ஸ்டாலின் மாற்றித் தந்துள்ளார். மின் சேவையில் வேளச்சேரி தன்னிறைவை எட்டியுள்ளது. விரைவில் இந்த மாற்றம் தமிழ்நாடு முழுவதுமாக பரவ இருக்கிறது" என்கிறார்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications