மழைக்கு முன்னாடி செய்ய வேண்டியதை.. இப்போதுதான் செய்யுறாங்க! சென்னையில் தொடங்கப்பட்ட மராமத்து பணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், வேளச்சேரியில் ஆகாயத்தாமரையை அகற்றும் பணிகள் தொடக்கப்பட்டிருக்கின்றன. பருவமழைக்கு முன்னதாக தொடங்க வேண்டிய பணிகளை.. பருவமழை ஆரம்பித்த பின்னர் செய்வது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.

சென்னை பொறுத்தவரை ஒவ்வொரு நவம்பர்-டிசம்பரும் ஏழரைதான். பெய்யும் மழை அப்படியே போய்விட்டால் பிரச்சனை இல்லை. ஆனால், அதிக அளவில் தண்ணீர் தேங்கினால்.. மக்கள் கேள்வி எழுப்ப தொடங்குவார்கள்.

Velachery

கடந்த 2 நாட்களாக சென்னையில் பல இடங்களிலும் பரவலாக தண்ணீர் தேங்கியிருப்பது மக்களை டென்ஷனாக்கியிருக்கிறது. சென்னைக்குள் பெய்யும் மழையை கடலுக்கு கொண்டு செல்லும் வேலையை அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் கூவம் ஆறுகள் செய்யும். ஆனால், ஆறுகளை பருவமழைக்கு முன்னதாக தூர் வார வேண்டும். அந்த வேலையை புதியதாக வந்த தவெக அரசு உடனடியாக செய்யவில்லை. அடையாற்றில் கருவேல மரங்கள் மண்டி கிடக்கின்றன. கரைகள் பலப்படுத்தப்படவில்லை.

இதே நிலைமைதான் கொசஸ்தலை மற்றும் கூவம் ஆறுகளுக்கும். எனவேதான் மிதமான மழைக்கே சென்னையில் பல இடங்களில் தேங்கிய தண்ணீர் வடிய நீண்ட நேரம் ஆகிறது. இது குறித்து சூழலியலாளர்கள், எதிர்க்கட்சியினர் விமர்சித்ததையடுத்து தற்போது மராமத்து பணிகளை அரசு தொடங்கியிருக்கிறது. வேளச்சேரி ஏரியில், ஆகாயத்தாமரையை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. வெள்ள நீர் ஏரிக்கு வருவதை தடுக்கும் வகையில் ஆகாயத்தாமரை இருப்பதால் அதை அகற்றும் பணிகள் இன்று காலை முதல் தொடங்கியிக்கின்றன.

அதேபோல அடையாற்றில் கருவேல மரங்களை அகற்றும் பணிகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் பருவமழைக்கு முன்னதாக செய்ய வேண்டிய பணிகள். இந்த ஆண்டு லேட்டாகத்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பணிகள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்று சென்னை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னைக்கு எச்சரிக்கை

இந்த ஆண்டு சூப்பர் எல்-நினோ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். எனவே சென்னையில் வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுபோக புயல்களும் வலுவானதாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, சென்னையில் வடிகால் பணிகள் முழு வேகத்தில் செய்யப்பட்டால் மட்டுமே மக்கள் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+