வேலூர் அமமுக வேட்பாளர் மாற்றம்... புதுவையில் 2 தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை: வேலூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் அமமுக சார்பில் புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அமமுகவும் வலிமையான கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்த தேமுதிக, அமமுக கூட்டணியில் உள்ளது.

இதுபோக அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் கட்சி, எஸ்டிபிஐ கட்சி அமமுக கூட்டணியில் உள்ளது. இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.
அமமுகவும் வேட்பாளர் பட்டியல் அறிவித்து விட்டது. இந்த நிலையில் அமமுகவில் வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அப்புபால் V.M.பாலாஜி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக V.D.தர்மலிங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமமுக சார்பில் புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வேட்பாளர் வெளியிடப்பட்டுள்ளது. காலாப்பட்டு தொகுதியில் பி.கலியமூர்த்தி, காரைக்கால் தெற்கு தொகுதியில் எஸ்.முகமது சித்திக் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications