வேலூரில் உயிர் போகும் நிலையில் 25 பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்.. உருக்கமான தகவல்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் 25 பயணிகளுடன் வரும்போது மாரடைப்பு பயணிகளை பத்திரமாக காப்பாற்றி உயிரை விட்டிருக்கிறார். இந்த சம்பவம் அரசு பேருந்து ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

பொதுவாக போலீசாரை போலவே அதிக மன அழுத்தத்துடன் வேலை செய்யும் ஊழியர்கள் என்றால் போக்குவரத்து ஊழியர்கள் தான். அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலையில் ஏற்படும் அழுத்தம், தொடர்ந்து உட்கார்ந்தே இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் உடல் நலன் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.

Vellore Government bus driver saves 25 passengers in a life-or-death situation in Gudiyatham

அதேபோல் குறுகிய சாலைகள், விதிகளை மதிக்காத பிற வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே தொடர்ந்து பேருந்தை இயக்கி கொண்டே இருப்பது போன்ற வேலை தொடர்பாக சிக்கல்களையும் அதிகமாக எதிர்கொள்கிறார்கள். இதனால் 40 வயதை கடந்த உடனே வாழ்வியல் முறை மாற்றம் மற்றும் திடீரென ஏற்படும் அழுத்தம் போன்ற காரணங்களால் மாரடைப்பு எதிர்கொள்கிறார்கள். அதுவும் பேருந்தை ஒட்டிச் செல்லும் போதே எதிர்கொள்வது அதிகமாக நடக்கிறது. அப்படி எதிர்கொண்டவர்கள், உயிர் போகும் நிலையிலும், மற்ற பயணிகளை காப்பாற்றிவிட்டு, உயிரைவிட்டுள்ளார்கள். அப்படித்தான் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேரணாம்பட்டிலிருந்து காலை 8 மணி அளவில் சுமார் 25 பயணிகளுடன் காட்பாடி சில்க் மில்க் பகுதியில் வசிக்கும் அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடசாமி மற்றும் நடத்துனர் அன்பழகன் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குடியாத்தம் நகரில் கவுண்டன்யா மகாநதி ஆற்று ஓரம் புதிய பைபாஸ் சாலையில் கங்கை அம்மன் கோவில் பாலம் அருகே வந்தது.

அப்போது ஓட்டுநர் வெங்கடசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ஓட்டுனர் வெங்கடசாமி, பேருந்தில் பயணிகள் காப்பாற்றுவதற்காக பேருந்தை சாமர்த்தியமாக நெஞ்சு வலியிலும் ஓரம் கட்டியுள்ளார். பேருந்தில் வந்த பயணிகள், ஓட்டுநர் வெங்கடசாமி மயங்கியதைக் கண்டு கூச்சலிட்டுள்ளனர்.

சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெங்கடசாமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அரசு பேருந்து ஓட்டுனர் வெங்கடசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதனை அறிந்த அவர் பணிபுரியும் பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் பணிமனை அதிகாரிகள், சக ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தனர். உடனடியாக அவருடைய மனைவி தற்காலிக ஆசிரியர் பேபி அவருக்கு குடியாத்தம் காவல்துறையினர் தகவல் கொடுத்ததின் அடிப்படையில் உறவினர்கள் விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் கதறி அழுதது காண்போரை உருக வைத்துள்ளது. இதனால் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. 25 பயணிகளின் உயிரை காப்பாற்றி அரசு பேருந்து ஓட்டுநர் உயிர் இழந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+