அரசியலில் இருந்து அண்ணாமலை ஓய்வு பெறுகிறாரா? பாஜக புதிய தலைவர் தமிழிசையா? வேலூர் இப்ராஹிம் விளக்கம்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் அது குறித்து விளக்கமளித்துள்ளார் பாஜக நிர்வாகி சையது இப்ராஹிம்.
இதுகுறித்து பாஜகவின் தேசிய சிறுபான்மை அணியின் செயலாளர் வேலூர் இப்ராஹிம் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாக ஒரு தகவல்கள் வருகின்றன. அவர் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கவில்லை, அவர் எடுக்கவும் மாட்டார். அவருக்கான இலக்கு என்பது மிக பெரியது.

அந்த இலக்கை அடையும் வரை அவர் மிக கடினமாக உழைப்பார். குறிப்பாக தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும். அதுதான் அவருடைய மிக முக்கிய நோக்கம். அந்த இலக்கை அவர் அடையும் வரை அவர் அரசியலில் இருந்து விலகுவார் என பேசுவது அவரை சிறுமைப்படுத்துவது, அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும் என யார் நினைக்கிறார்களோ அவர்களுடைய எண்ணமாகத்தான் பார்க்க முடியும்.
ஒரு காலத்திலும் அவர் அரசியலில் இருந்து விலக மாட்டார். கடுமையாக போராடி, உண்மையை நிலைநாட்டுவதற்காக தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி, பிரதமர் மோடியின் ஆட்சியை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அவருடைய இலக்கு. எனவே அவர் அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறார் என தவறான விஷயங்களை பரப்புகிறார்கள்.
லண்டன் பயணம்: உண்மையில் சர்வதேச அரசியல் என்கிற ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் உலகம் முழுக்க உள்ள அதில் தேர்ச்சி பெறுகிற திறமையானவர்களை அழைத்து இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு பயிற்சிக் கொடுக்கிறார்கள். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள அவர் லண்டன் பயணம் செய்கிறார் என்பதுதான் எனக்கு கிடைத்த தகவல்.
கடந்த காலங்களில் தமிழிசை சவுந்திரராஜன் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகிய பிறகு, எனக்கு தெரிந்து 5 அல்லது 6 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் என்ற பதவி காலியாகவே இருந்தது. அதன் பின்னர்தான் மாநில தலைவராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டார்.
பொறுப்பாளர்: அது போல் அண்ணாமலை வெளிநாடு செல்லும் போது தமிழக பாஜகவின் நடைமுறைகளை ஒரு பொறுப்பாளரை வைத்து பார்த்து கொள்ளலாம் என தெரிகிறது. இல்லாவிட்டால் மாநிலத்தின் அமைப்பு பொதுச் செயலாளர் இருக்கிறார், அவரும் மிகத் திறமையாக கையாள்வார். எல்லா மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளும் அவருக்கு தெரிந்திருக்கிறது.
எனவே அவருடைய நேரடி கண் பார்வையில் கூட இந்த 4 அல்லது 5 மாதங்கள் தமிழக பாஜக வீறுநடைபோடும். திமுகவோ, காங்கிரஸோ மக்களுக்கு எதிராக எதை செய்தாலும் அண்ணாமலை எந்த நாட்டில் இருந்தாலும் அதற்கான கண்டனத்தை அவர் பதிவு செய்யும் வசதி தற்போது உள்ளது. அது போல் தமிழக பாஜக எது போன்றதொரு பதிலடியை தர வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் அண்ணாமலை தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொழில்நுட்பம் : ஒரு தலைவர் நாட்டில் இல்லை என்றாலும் அவர் நேரடியாக செயல்படுவதற்கான எல்லா தொழில்நுட்பங்களும் இருக்கின்றன. எனவே பெரிய இழப்போ பாதிப்போ அல்லது பாஜகவின் வளர்ச்சிக்கு ஒரு பின்னடைவோ ஏற்படும் என நான் கருதவில்லை. அண்ணாமலை வெளிநாடுகளில் இருந்தாலும் அங்கிருந்து தனது கருத்துகளை பதிவு செய்து தொடர்ந்து தனது அரசியல் முன்னேற்றத்தை திமுக செய்யும் ஊழலை எதிர்க்கக் கூடிய களத்தில் நின்று போராடுவார். அண்ணாமலையின் சேவை தமிழகத்திற்கு தேவை என இப்ராஹிம் தெரிவித்தார்.
பின்னணி என்ன: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார் என்றும் அவர் அங்கு 6 மாதங்கள் பயிற்சி பெறுகிறார் என்றும் அந்த 6 மாதங்கள் வரை கட்சி தொய்வடையாமல் இருக்க புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவின. அதற்கேற்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சந்தித்து பேசியிருந்தார். எனவே அவர் மீண்டும் தலைவர் பதவிக்கு வருவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் வேலூர் இப்ராஹிம் விளக்கமளித்துள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications