சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் அருகே ஷாக்.. வார்டு பெயர் எழுதப்பட்ட மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம்.. சிக்கும் பிரபலம் யார்?

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர் அருகே தனியார் சிமெண்ட் குடோனில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல்- வீடியோ

    சென்னை: வேலூர் அருகே தனியார் சிமெண்ட் குடோனில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வார்டுவாரியாக வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பணம் தொடர்பாக அதில் குறிப்பு எழுதி வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இரு தினங்களுக்கு முன்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரிகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடுவது சில மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு துரைமுருகன் ஆதரவாளர்கள் வாக்குவாதம் நடத்தியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    எங்கிருந்தோ பறந்து வந்த செருப்பு.. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஷாக்எங்கிருந்தோ பறந்து வந்த செருப்பு.. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஷாக்

    சிமென்ட் குடோன்

    சிமென்ட் குடோன்

    இந்த நிலையில் வருமான வரித்துறையினர் வேலூர் மாவட்டத்தின் பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, கட்டுக்கட்டாக மூட்டைகளில், அட்டைபெட்டிகளில் பணம் கட்டி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    2000 ரூபாய் நோட்டுக்கள்

    2000 ரூபாய் நோட்டுக்கள்

    இவை அனைத்துமே ரூ.2000 நோட்டுக்களாகும். ஒவ்வொரு மூட்டையிலும், வார்டு எண் எழுதி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டு எண்கள் இவையாகும். எனவே தொகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவே இவ்வாறு மூட்டை மூட்டையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

    பணம் எண்ணுகிறார்கள்

    பணம் எண்ணுகிறார்கள்

    பணம் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.15 கோடி அளவில் பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெரிய அளவிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் இது கண்டிப்பாக அரசியல் பிரபலம் ஒருவரின் பணமாகத் தான் இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    மாற்றப்பட்ட பணம்

    மாற்றப்பட்ட பணம்

    இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் கூறுகையில், ஒரு பிரபலத்தின் வீடு மற்றும் கல்லூரிகளில் சோதனை நடத்தியிருந்தோம். எங்கள் சோதனையை தெரிந்து கொண்டதும் அன்றைய தினம் நள்ளிரவில் இந்த பணத்தை அந்த பிரபலம் தனது கல்லூரியில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு மாற்றிவிட்டார். இப்போது அதையும் தெரிந்து பறிமுதல் செய்துள்ளோம் என்றனர்.

    சிக்குவது யார்

    சிக்குவது யார்

    இதனிடையே இந்த பணம் அந்த பிரபலத்திற்கு சொந்தமானது என ஆதாரப்பூர்வமாக தெரியவந்தால், வருமான வரித்துறையினரிடம் அவர் சிக்க வேண்டியிருக்கும் என்பதால் அரசியல் ரீதியாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Income Tax department recovers huge amount of cash from a cement godown in Vellore. The cash was shifted here from a politician college on March 29-30 midnight, said an I-T official.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X