தேவயானி முதல் AK 47 கமாண்டோ படை வரை.. மகளிர் உரிமை தொகையை வைத்து.. ஸ்டாலின் சொன்ன மெசேஜ்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் திட்டம் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற பெயரில் இன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுக்க மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. 17 லட்சம் பெண்களுக்கு இன்று மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் மூலம் பணம் அனுப்பப்பட்டது. இன்று மாலைதான் இதற்கான விழா நடந்தது என்றாலும் கூட காலையிலேயே பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது.

பயனாளிகள் எல்லோருக்கும் காலையிலேயே பணம் அனுப்பப்பட்டுவிட்டது. ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் 1.3 கோடி பெண்களுக்கு பணம் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் விரிவாக்கம் இன்று மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு இன்று பணம் அனுப்பப்படுகிறது.
வெல்லும் தமிழ்ப் பெண்கள்
மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் திட்டம் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சியில் என்ற பெயரில் இன்று நடத்தப்பட்டது. இதில் இன்று நடிகை தேவயானி, பல பிரபலங்கள், ஏகே 47ஐ கையாளும் கமாண்டோ பெண் படையினர், அரசியல் பெண் பிரபலங்கள், உள்ளூர் அளவில் அதிகாரத்தில் உள்ள பெண்கள் பலரும் இடம்பெற்று இருந்தனர்.
பெண்களுக்கு முக்கியத்துவம்
இந்த நிகழ்வு முழுக்க முழுக்க பெண்களை கவரும் விதமாக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. கடந்த தேர்தல்களில் மகளிர் உரிமை தொகை பெரிய அளவில் கவனம் பெற்றது. தேர்தல் முடிவுகளை மாற்ற காரணமாக இருந்தது. பெண்கள் வாக்குகள் பெரிய அளவில் தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த நிலையில்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இன்று வெல்லும் தமிழ்ப் பெண்கள் திட்டம் நடத்தப்பட்டது. அடுத்த 6 மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் பெண்கள் வாக்குகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் இந்த நிகழ்விற்கு இன்று அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு இன்று பணம் அனுப்பப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இச்செய்தி, அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 13ம் தேதி முதல் உதவித்தொகை கிடைக்கும் என்றும் தெரிவித்தது. அதன்படியே இன்று காலை அவர்களுக்கு பணம் அளிக்கப்பட்டது.
மகளிர் உரிமை தொகை - மேல்முறையீடு
விண்ணப்பித்த அனைவருக்கும், விண்ணப்பத்தின் நிலை குறித்த குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணம் குறுஞ்செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்படும். இது, விண்ணப்பதாரர்கள் குறைகளை அறிந்து, மேல்முறையீடு செய்வதற்கு முன் சரிசெய்ய உதவும்.
மேல்முறையீடு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் பகுதி மகளிர் நலத் தனி வட்டாட்சியரை அணுகலாம். குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டைச் செய்ய வேண்டும். நிராகரிப்புச் செய்தியுடன் சென்று, அதிகாரியின் அறிவுரைகளைப் பின்பற்றவும்.
எப்படி மேல்முறையீடு செய்வது?
மேல்முறையீட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரின் சீராய்வுக்கு அனுப்பப்படும். அதிகாரிகள் ஆவணங்களை மீண்டும் சரிபார்த்து, விண்ணப்பதாரரின் தகுதியை முடிவு செய்வார்கள். சிறுபிழைகள் அல்லது ஆவண முரண்பாடுகளால் தகுதியான பெண்கள் யாரும் விடுபடாமலிருக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக, இ-சேவை மையங்கள் மூலமாகவும் மேல்முறையீடுகளை சமர்ப்பிக்க அரசு வழிவகை செய்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல முடியாத பெண்கள், தங்கள் அருகிலுள்ள மையங்கள் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழக அரசின் முக்கிய நலத்திட்டம். இந்த மேல்முறையீட்டு அமைப்பு, தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் திட்டப் பலனைச் சிரமமின்றி பெறுவதை உறுதி செய்கிறது. விண்ணப்ப நிலை குறித்த முக்கிய குறுஞ்செய்திகளைத் தவறவிடாமல் இருக்க, கைபேசி எண்களை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்க அரசு வலியுறுத்தியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications