தவெக அளவிற்கு தவாகவை மக்களிடம் கொண்டு செல்ல முடியலை.. ஒப்புக்கொண்ட வேல்முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா புகழ் தனக்கு இல்லாததால், நடிகர் விஜய் அளவிற்கு அரசியல் கட்சியைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியவில்லை என்று தவாக வேல்முருகன் கூறியுள்ளார். அதேபோல் திமுக கூட்டணியில் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் அரசியல் தலைவர்களும் தீவிரமாகத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் தவாக தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Velmurugan admits Vijay s cinematic fame outshines Tamizhaga Vazhurimai Katchi s reach in Tamil Nadu

முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய பின், இதுவரை அவரை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரிக்காத முக்கியமான தலைவர்களில் தவாக வேல்முருகனும் ஒருவர். இதனால் திமுக கூட்டணியில் வேல்முருகன் தொடர்கிறதா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதனிடையே திமுக கூட்டணியில் தவாக ஒரு நெருக்கடியுடன் தொடர்வதாக சில பேச்சுகள் எழுந்தன.

இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சென்று வேல்முருகன் சந்தித்ததாகக் கூறப்பட்டது. அதனை வேல்முருகன் முற்றிலுமாக மறுத்திருந்தார். பாஜகவை தங்களின் எதிரி என்றும் அறிவித்திருந்தார். இதனால் அதிமுக கூட்டணி பக்கமும் போக முடியாத நிலையில் வேல்முருகன் இருப்பதாகப் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்தித்து வேல்முருகன் பேசுகையில், திமுக கூட்டணியில் தனிப்பட்ட நெருக்கடி என்று எதுவும் இல்லை. நான் ஒரு கொள்கை சார்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும், மொழிக்கும் போராடும் ஒருவன். என் மக்கள் குறித்து நான் கவலை கொள்கிறேன். 14 ஆண்டுகளாக தமிழக வாழ்வுரிமை கட்சி என்றும், அதன் சுருக்கமாக TVK என்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து செயல்பட்டு வருகிறோம்.

எங்கள் கட்சியை ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என்று இருக்கிறது. எந்தவொரு போராட்டக் களத்தையும், சட்டசபை அனுபவங்களையும் தெரிந்து கொள்ளாத ஒருவருக்கு 14 ஆண்டுகளாகக் கட்டிக்காத்த என்னுடைய TVK என்ற ஆங்கிலச் சுருக்க எழுத்தைக் கொடுக்கிறார்கள். எனக்கு சினிமாப் புகழ் இல்லை.. அதனால் தமிழக மக்கள் முன்னிலையில் விஜய் சென்றடைந்த அளவிற்கு என்னால் சென்றடைய முடியவில்லை.

அதனால் விஜயின் கட்சியை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் சட்டசபையில் தவாக வேல்முருகன் திடீரென சபாநாயகர் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால், முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வேல்முருகனை கண்டித்திருந்தார். இதன்பின் தவாக மற்றும் திமுக இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டது. இதனிடையே ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+