எந்த அரசியல் கட்சி, அமைப்பு குறித்து தவாகவினர் விமர்சிக்கவே கூடாது- வேல்முருகன் கடும் கண்டிப்பு!
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், "தமிழ்நாட்டில் செயல்படும் எந்த ஒரு அரசியல் கட்சி குறித்தோ, அமைப்பு குறித்தோ,அதன் தலைமைகள் குறித்தோ, அதன் பொறுப்பாளர்கள் குறித்தோ பொதுவெளியிலோ,சமூக வலைத்தளங்களிலோ, காணொளிகளின் ஊடாகவோ, தனிப்பட்ட நேர்காணல்களின் மூலமாகவோ அவர்களை அவமதிக்கும் வகையில் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது" என்று அதன் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார். திருச்சியில் முன்னாள் நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்த மாவீரர் நாள் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் வேல்முருகன் இதனைத் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் மாவீரர் நாள் பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை உருவாக்கியவர்கள் இந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் சிறப்பரையாற்றினார். ஆனால் சீமான் பெயரை சொல்லாமல் மறைமுகமாக இந்தக் கூட்டத்தில் விமர்சித்திருந்தார் வேமுருகன்.

இந்த நிலையில் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் கண்டிப்பான வேண்டுகோள்.
தமிழ்நாட்டில் செயல்படும் எந்த ஒரு அரசியல் கட்சி குறித்தோ, அமைப்பு குறித்தோ,அதன் தலைமைகள் குறித்தோ, அதன் பொறுப்பாளர்கள் குறித்தோ பொதுவெளியிலோ,சமூக வலைத்தளங்களிலோ, காணொளிகளின் ஊடாகவோ, தனிப்பட்ட நேர்காணல்களின் மூலமாகவோ அவர்களை அவமதிக்கும் வகையில் தரக்குறைவாக விமர்சிக்கக் கூடாது.
நம் பணி என்பது உண்மையும் நேர்மையுமாக தமிழ்நாட்டு தமிழர்களுக்கும்,ஈழத் தமிழர்களுக்கும்,உலகத் தமிழர்களுக்கும் பயன்படக்கூடிய வகையில் அவர்களின் உரிமைகளை காக்கும் வகையில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர இது போன்ற குழு விவாதங்களில் ஈடுபடுவது அல்ல.
இது போன்ற செயல்கள் தமிழர் உரிமைகளுக்காக போராடும் கட்சிகள் மற்றும் அமைப்புகளான நமது தொப்புள் கொடி உறவுகளுக்குள்ளேயே தேவையற்ற மன வருத்தங்களையும், பகைமைகளையும் மட்டுமே உருவாக்கும். இது நமது நோக்கமல்ல.
இதுவரையில் மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் நம்மை விமர்சித்திருந்தாலும் அதற்கு எதிர்வினையாக சில காணொளிகளும் முகநூல் பதிவுகளும் வெளியிடப்பட்டுள்ளதாக அறிகிறேன். அது போன்ற செயல்களும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.
எவர் போற்றினாலும் எவர் தூற்றினாலும் எப்போதும் போல நம்முடைய பணியை தமிழ்நாட்டிற்கும்,தமிழீழத்திற்கும் உலகத் தமிழர்களுக்கும் உறுதியாக களத்தில் நின்று மேற்கொள்வோமென்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு;தொடர்ந்து தலைமையின் அறிவுறுத்தல்களை மீறி இது போன்ற கட்டுப்பாடற்ற செயல்களில் ஈடுபடும் பொறுப்பாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications