கூத்தாடிதான்.. இதுக்காக என்னை விஜய் ரசிகர்கள் கல்லால் அடிச்சாலும் அடிப்பாங்க! விமர்சித்த வேல்முருகன்
சென்னை: கூத்தாடிகளை கொண்டாடும் நிலையை உடைக்க வேண்டும் என நடிகர் விஜய்யின் கட்சி பெயரை கூறாமல் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னையில் நடந்த விழாவில் நேற்று விமர்சித்திருந்தார்.
சென்னையில் முத்தமிழ் பேரவை சார்பில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட வேல்முருகன் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார். இதனால் அவருக்கு சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் எ ராசேந்திர சோழனின் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் படத் திறப்பு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தின் மிகப் பெரிய கதாநாயகன், நேற்றுதான் ஒரு கட்சியை ஆரம்பித்தார். அதற்காக உறுப்பினர் சேர்க்கையை ஆன்லைனில் தொடங்கினார்.
அப்போது உறுப்பினர் சேர்க்கைக்கு பலரும் முந்தியதால் கூகுளே ஸ்தம்பித்துவிட்டது என சொன்னார்கள். அவருடைய கட்சிக்கு 20 லட்சம் உறுப்பினர்கள் என்கிறார்கள். அடுத்த நாளே ஒரு சேனலில் 50 லட்சம் உறுப்பினர்கள் வந்துவிட்டார்கள் என்கிறார்கள்.
விஜய்யே எதிர்பார்க்கல.. மீண்டும் சொதப்பிருச்சே? திணறுது தமிழக வெற்றிக் கழகம்.. பிளான் பெரிசா இருக்கே
நான், மணியரசன், திருமாவளவன், தியாகு உள்ளிட்டோர் எல்லாம் 40 ஆண்டுகளாக இந்த தமிழ் சமூகத்திற்காக தூக்கு கயிற்றை முத்தமிட்டுவிட்டு ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கிட்டு, அதில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு டீ, பிஸ்கட், ரொட்டி கிடைத்தால் உண்பது, இல்லாவிட்டால் பட்டினி கிடந்து இந்த மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்கிற எண்ணற்ற தியாகிகளை இந்த இளைஞர் சமுதாயம் தூக்கி எறிந்துவிட்டது.
கூத்தாடிகளை தூக்கி வைத்து கொண்டாடும் இந்த நிலை உடைபட வேண்டும். நான் பேசிவிட்டு வெளியே போனால் விஜய் ரசிகர்கள் 100 பேர் என்னை கல்லால் அடித்தாலும் கேட்க ஆள் இல்லை. அவர்களுக்கு யார் தியாகு, யார் பாவா, அவர்களுடைய சிந்தனை என்ன, எழுத்து என்ன , சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன உள்ளிட்ட எதை குறித்தும் விஜய் ரசிகர்களுக்கு கவலை இல்லை.
உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்றார்கள். அப்படிப்பட்ட ரஜினியின் பாபா பட பெட்டிகள் எல்லாம் என் முந்திரி காட்டில்தான் இருந்தன. அப்படி சூப்பர்ஸ்டாரையும் எதிர்த்துதான்43 ஆண்டுகளாக அரசியல் களத்தில் நிற்கிறேன். சுயமாக உருவானவர் திருமாவளவன். எங்களை போன்ற வளரும் இளம் தலைமுறையை கைதூக்கிவிட ராஜேந்திர சோழன் போன்ற ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களை இது போன்ற மேடைகள் அங்கீகரித்து பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?: நடிகர் விஜய் கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார், இந்த கட்சியின் ஆங்கில சுருக்கம் TVK,அது போல் வேல்முருகன் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆங்கிலச் சுருக்கமும் TVK என வருவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்
நடிகர் விஜய் தனது கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கைக்காக ஒரு செயலியை கடந்த 8-ஆம் தேதி தொடங்கினார். இந்த செயலி தொடங்கிய இரண்டே நாளில் 50 லட்சம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். முதலில் நிறைய பேர் உறுப்பினர் கார்டு வாங்க அந்த செயலியை பயன்படுத்தியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அது சரியானது. இதையடுத்து புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சிக்கு இரண்டே நாட்களில் இத்தனை உறுப்பினர்கள் சேர்வது பெரிய கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி!












Click it and Unblock the Notifications