“விஜய் பாணியிலேயே சொல்லணும்னா.. தவெக வாக்குறுதிகள் வொர்த் இல்லை”.. தவாக வேல்முருகன் சுளீர்!
சென்னை: விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் அந்த அளவுக்கு வொர்த் இல்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். திருமணத்தின் போது ஒரு சவரன் தங்க நகை குழந்தை பிறந்தால் அரை சவரன் தங்கம் என்பது சாத்தியமில்லை என வேல்முருகன் கூறியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது வரவேற்கத்தக்கது. சசிகலா தனியாக கட்சி ஆரம்பித்தது அவரது உரிமை. திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி 6 இடங்கள் கேட்டுள்ளது.

முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடித்து உள்ள நிலையில் திருச்சி மாநாடு முடிந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பு தான் எவ்வளவு தொகுதிகள் என தெரியவரும். நான் மீண்டும் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுவதை திமுக தலைமை தான் முடிவு செய்யும்." என்றார்.
அப்போது அவரிடம், தவெக பாஜக உடன் கூட்டணி பேசுவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, "விஜய் எந்த மதவாதத்திற்கு எதிராக நான் கட்சி தொடங்கியிருக்கிறேன் என்று சொன்னாரோ, அதே கட்சியோடு அவர் கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டு மக்கள் அவரை நிராகரிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, "விஜய் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், அந்த அளவுக்கு அதெல்லாம் வொர்த் இல்லை. எல்லாமே ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், கட்சியின் தலைவர்கள் கொடுத்த தேர்தல் அறிக்கைகளை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி அவர் வெளியிட்டிருக்கிறார்.
அவர் சொல்வதில் பல திட்டங்கள் இந்த மண்ணில் ஆண்டாண்டு காலமாக, பன்னெடுங்காலமாக நடந்தேறி வருகின்ற திட்டங்கள். அந்தத் திட்டங்கள் இந்தத் தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லையா, அது நடந்து வருகிறதா இல்லையா என்கிற ஒரு அடிப்படைப் புரிதல் கூட அவருக்கு இல்லாதது தான் இதைக் காட்டுகிறது" எனத் தெரிவித்தார்.
நடிகர் விஜய் குறிப்பிடுவது போல் ஒவ்வொரு திருமணம் ஆகக்கூடிய பெண்ணிற்கும் ஒரு பவுன் தங்கம் கொடுக்க முடியுமா? பிறக்கும் குழந்தைக்கு மோதிரம் போட முடியுமா? என்பதெல்லாம் சாத்தியம் இல்லை. சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையோடு விஜய் ஒப்பிட்டு பார்ப்பது ஏற்புடையது அல்ல. திருமணம் ஆகக்கூடிய பெண்களுக்கு ஒரு சவரன் நகை என்பது நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கை. குழந்தைகளுக்கு அரை சவரம் தங்க மோதிரம் எவ்வாறு அணிவிக்க முடியும்?" என கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு, "மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்றுகூடி திமுக தலைமையில் நான்கு தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இந்தத் தேர்தலிலும் திமுக தலைமையிலான இந்த அணி மகத்தான வெற்றி பெறும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழகத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும் நிலையில் தேர்தல் அறிக்கைகளை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற கேள்விக்கு, "திமுகவை பொறுத்தவரை பத்து லட்சம் கோடி கடன் இருந்தாலும், வருகின்ற வரி வருவாயை வைத்து மிகச் சிறப்பாக மாணவர்கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை எல்லாம் பார்த்துத் திட்டமிட்டு அளவறிந்து அந்த நிதி ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார் வேல்முருகன்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications