உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு! 100% தமிழக மாணவர்களுக்கு மட்டும் இடம் வழங்குக! வேல்முருகன் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர தமிழக மாணவர்களுக்கு மட்டும் 100 விழுக்காடு இடம் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை போல் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மருத்துவ ஆணையம்

மருத்துவ ஆணையம்

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இடங்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கு இணையாக மட்டுமே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவக் கல்வி

மருத்துவக் கல்வி

அதன்படி, தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான 13,650 ரூபாய் போன்றே, தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட வேண்டும். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த கட்டண நிர்ணய ஆணையை ஒன்றிய, மாநில அரசுகள் வெளியிட்டால்தான், தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்கள் சேரமுடியும்.

50 விழுக்காடு

50 விழுக்காடு

அதே போன்று, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டு என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, நடப்பாண்டிலேயே அமல்படுத்த ஒன்றிய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள 100 விழுக்காடு, உயர்சிறப்பு மருத்துவ இடங்களையும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மருத்துவக் கல்லூரிகள்

மருத்துவக் கல்லூரிகள்

மேலும், தமிழ்நாடு உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணங்களை கண்காணிப்பதற்கு, பணியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+