கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கிறாங்க... தடுத்து நிறுத்துங்க... வேல்முருகன் வலியுறுத்தல்!
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்
.கர்நாடகாவில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதோடு, தாக்குதலில் ஈடுபடும் கன்னட அமைப்பினர் மீது அந்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக அரசும், மத்திய அரசும் இதில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அது இந்திய இறையாண்மையை பாதிக்கும் என்றும் வேல்முருகன் கூறி உள்ளார்.

தமிழத்தில் ஆதரவு
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராடி வருகின்றன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

தமிழர்களுக்கு மிரட்டல்
இதேபோல் கர்நாடகாவில் உள்ள தமிழர்களும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கன்னட அமைப்பினர், தமிழர்கள் வைத்திருந்த பதாகைகளும், கருப்புக்கொடியையும் கிழித்து எரிந்துள்ளனர். தமிழில் பதாகைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள்மிரட்டல் விடுத்துள்ளனர்.

தாக்குதல்
கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது கன்னட அமைப்பினர் மிரட்டல் விடுவதும் காலம் காலமாக தொடர்கதையாகவே அரங்கேறி வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது, தமிழர்கள் மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தினர்.

தீயிட்டு கொளுத்தப்பட்டன
தமிழர்களின் உணவகங்கள், உடைமைகள், தமிழ் பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் அரை நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டு, கன்னட அமைப்பினர்களால் தாக்கப்பட்டார்.

நடவடிக்கை வேண்டும்
இவ்வாறு கர்நாடகாவில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போன்று கர்நாடகாவில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதோடு, தாக்குதலில் ஈடுபடும் கன்னட அமைப்பினர் மீது கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்படும்
இப்படி நடவடிக்கை எடுப்பதில் கர்நாடக, மத்திய அரசு காலம் தாழ்த்தினால் அது இந்திய இறையாண்மையை பாதிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications