விஜய் கட்சிக்கு புதுச் சிக்கல்! TVK பெயரை தேர்தல் ஆணையம் கொடுக்காது! சொல்றது யாருன்னு பாருங்க!
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆங்கில சுருக்கமான TVK என்பதை தாங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருப்பதால், விஜய்க்கு TVK என்ற பெயரை தேர்தல் ஆணையம் கொடுக்காது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்துடன் கூடுதலாக ஒரு பெயரை இணைத்து வேண்டுமானால் விஜய் தனது கட்சியை பதிவு செய்யலாமே தவிர TVK என பதிவு செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழக உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்கு விஜய் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பதை தாம் மறுக்கவில்லை என்றும் இதனால் தான் மற்ற நடிகர்களை விமர்சிப்பதை போல் தாம் விஜயை விமர்சித்தது இல்லை எனவும் வேல்முருகன் கூறியுள்ளார்.

அதே வேளையில் சினிமாவில் நடிப்பது மட்டுமே தலைவராவதற்கு தகுதி கிடையாது என்று தெரிவித்த அவர், விஜய்க்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் என்பதும் மக்கள் அவருக்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதும் தனது நிலைப்பாடு என்று கூறியுள்ள வேல்முருகன், விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் தன்னை அதிமுக, பாஜக தரப்பு எம்.பி.சீட் கொடுப்பதாக கூறி அழைப்பு விடுப்பதாகவும் சீட்டுக்காக் கொள்கையை மறந்து செல்லக் கூடாது என நினைப்பதால் இன்னும் திமுக கூட்டணியில் தொடர்வதாக கூறியுள்ளார்.

ஆனால் அதே வேளையில் காங்கிரஸ் கட்சி மீதான தனது எதிர்ப்பு குறையவில்லை என்றும் இதனால் தான் இந்தியா கூட்டணியில் தான் இணையவில்லை எனவும் கூறியுள்ள வேல்முருகன், கடந்த 3 தேர்தல்களிலும் திமுக வேட்பாளர்களுக்கு மட்டும் அவர்கள் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் செய்ததாகவும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தாம் பிரச்சாரம் செய்தது கிடையாது எனவும் கூறியுள்ளார்.
TVK என்ற பெயரை கொடுக்க வேல்முருகன் ஆட்சேபனை தெரிவித்து எதிர்க்கும் பட்சத்தில், விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகத்தை ஆங்கிலத்தில் அதாவது Tamilaga vetri party என்பதன் சுருக்கமாக TVP என பதிவு செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications