இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! சூழ்ச்சியை முறியடித்திடுக! முதல்வருக்கு த.வா.க.கோரிக்கை!
சென்னை: இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் சூழ்ச்சியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
யுஜிசியின் பொது நுழைவுத் தேர்வு உத்தரவு உயர் கல்விக்கு செல்லுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்கும் நோக்கில் உள்ளதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கல்வியின் முக்கியம்
ஒரு சமூகத்தின் இளையோரை அறிவும், பண்பும் உடையவர்களாக வளர்த்தெடுப்பதில், அங்கு அளிக்கப்படும் கல்வி முதன்மையாக பங்காற்றுகிறது.
இந்த கல்விச் சீரழிவின் தொடர்ச்சிதான், இந்தியாவில் உள்ள 45 ஒன்றிய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசியின் உத்தரவு.

13 மொழிகள்
இந்த நுழைவுத் தேர்வை, தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, பஞ்சாபி, அசாமி, ஒடியா உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தவும், மூன்றரை மணிநேரம் நடைபெறவுள்ள இந்த தேர்வில் உள்ள அனைத்து கேள்விகளும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேட்கவும் யுஜிசி முடிவு செய்துள்ளது.

14 பல்கலைக்கழகங்கள்
இந்த பொது நுழைவுத் தேர்வு முன்பே இருப்பதுதான். ஆனால், இதுவரை 14 பல்கலைக்கழகங்கள் மட்டுமே பின்பற்றி வந்த இத்தகைய நடைமுறை, இந்தியாவில் உள்ள 45 ஒன்றிய பல்கலைக்கழகங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் எந்த வகையிலும் தமிழ்நாட்டிற்கு பயன்படாது. இந்த பொது நுழைவுத் தேர்வு என்பது ஒரு மோசமான ஒன்றிய மயமாக்கும் நடைமுறை.

13 மொழிகளில்
இந்தியா என்பது பல மொழிகள், பல மாநிலங்கள் கொண்டது. 13 மொழிகளில் இந்த தேர்வு நடை பெற்றாலும், 12 ஆண்டுகள் மாநில பாடத்திட்டத்தில் படித்த ஒருவர், எப்படி ஒன்றிய பல்கலைக்கழகத்தில் சிபிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கேற்க முடியும். தற்போது அறிவித்துள்ள இந்த முறை, நீட் தேர்வை போன்று, தனியார் நிறுவனங்கள் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் முறைக்கு வழிவகுக்கும். இதன் மூலம், மாணவர்களிடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்யப்படும்.

பல்கலை. மானியக்குழு
மேலும், பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில பல்கலைக் கழகமும் ஏற்றுக் கொண்டால் நடத்தலாம் என்ற உத்தரவும் இணைக்கப்பட்டிருக்கிறது. சில மாதங்கள் பின்னர், பல்கலைக் கழக மானியக் குழு வழங்கும் நிதி, மாநில பல்கலைக் கழகங்களுக்கு வந்தடைய வேண்டுமானால் நுழைவுத்தேர்வை கட்டாயமாக்க அடுத்து ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படும் அபாயமும் உள்ளது.

மாணவர் சேர்க்கை
நாட்டில் இன்னும் பெரும்பாலானோர் உயர்கல்வியை எட்டாமலே, பள்ளிக்கல்வியோடு முடங்குவதாக புள்ளிவிவரங்கள் கூறிய வரும் நிலையில், யுஜிசியின் உத்தரவு உயர் கல்விக்கு செல்லுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, இளநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற உத்தரவை யுஜிசி திரும்ப பெற வேண்டும்.

தமிழ்நாடு அரசு
இவ்விவகாரத்தில் தமிழ்நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து, ஒன்றிய அரசிற்கு போதிய அழுத்தத்தை தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும். கல்வி குறித்த அதிகாரம் அனைத்தும் பழையபடி மாநில அரசுக்கு திரும்ப பெற வேண்டும். தமிழே தமிழ்நாட்டின் அனைத்து கல்வி மொழியாக அமைய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications